ஜவுளிக்கடைகள் திறப்பு எப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்.!!

தமிழகம்

 

வடசென்னையில் ஜவுளிக்கடைகள் திறக்கப்படாதது ஏன் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் , ஜவுளிக்கடை அதிபர் ஏ,வி.எஸ் மாரிமுத்துவிடம் விளக்கினார்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பாத்திரக்கடைகள், ஜெராக்ஸ் , பேன்ஸி அழகு சாதன பொருட்கள் போட்டோ வீடியோ கடைகள் . சலவைக்கடைகள் தையல் கடைகள் அச்சகங்கள் மற்றும் ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும், ஏற்கனவே கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகளுக்கு பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, நாளை முதல் அவை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது, அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடனும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படஅனுமதிக்கப்படும், பிளம்பர்கள் .எலக்டரீசியன்கள் கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், மற்றும் தச்சர், போன்ற சுய தொழில் முனைவோர் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர்,
திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 பேர் மட்டும் பணியாற்றும் வகையில் நடத்தலாம், பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குளிர் சாதன வசதியில்லாமல் 50 சதவீத இருக்கைகளில் அனுமதிக்கப்படும் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி 100 சதவீத போக்குவரத்து அனுமதிக்கப்படும்,
வாடகை வாகனங்கள் டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர்,
திருமண நிகழ்வுகளுக்கு வகை 2 மற்றும் வகை 3 – ல்குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு இ- பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும், இதற்கான இ பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (http:\\eregister.tnega.org)விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் மேலும் திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ள 50 சதவீத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்,
இந்த நிலையில் நாளை முதல் ஜவுளிக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று வண்ணாரப்பேட்டை ஜவுளிக்கடைகளின் வியாபாரிகள் எதிர்ப்பார்த்தனர், 45 நாட்களாக ஊரடங்கால் அவதிப்பட்டு வரும் ஜவுளிக்கடைகள் திறக்காததால் சுமார் 2000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது, இதற்கிடையில் வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்புத்தலைவர் விக்கிரமராஜா, வண்ணாரப்பேட்டை ஜவுளிக்கடை சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஏ.வி.எஸ். மாரிமுத்து, மற்றும் நகைக்கடை அதிபர் ஜெயந்திலால் ஆகியோர் நேற்று முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர்,
இது குறித்து ஏ.வி.எஸ் மாரிமுத்து ராயபுரம் ரவுண்டப் நிருபரிடம் கூறுகையில் , ஊரடங்கு பற்றிய செய்திக்குறிப்பை அனுப்புவதற்கு முன்னர், ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள் குறித்த பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியான கருத்துக்களை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் எங்களை சந்திக்க விரும்பினார். இந்த சந்திப்பில் விக்கிரமராஜா , நான் ( ஏ.வி.எஸ். மாரிமுத்து ) மற்றும் ஜெயந்திலால் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர், அதன் அடிப்படையில் அவரை சந்தித்தோம், இந்த சந்திப்பின்போது முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்
மெட்ரோ ரயில் , பேருந்துகளை ஒரே நேரத்தில் அனுமதியளித்திருக்கிறோம், எனினும் தளர்வுகளை படிப்படியாக வழங்க வேண்டும் என்பதால் உடனடியாக ஜவுளிக்கடைகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை. இப்போது சென்னை உள்ளிட்ட நகரங்களில் தொற்று குறைய தொடங்கியிருக்கிறது, மூன்றாவது அலை வீசும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதற்குள் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை தயார்ப்படுத்த வேண்டும் ,
அதன்பின்னர் நிலைமை சுமுகமாகி விடும், அனேகமாக அடுத்த வாரங்களில் மேலும் தளர்வு செய்யப்படும் . 28 ம்தேதிக்கு பின்னர், ஜவுளிக்கடைகள் திறப்புக்கான வாய்ப்பு இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்ததாக ஏ.வி.எஸ் மாரிமுத்து தெரிவித்தார்,
ஊரடங்கு நீடிப்பு அறிவிப்பதற்கு முன்னர் எங்களை அழைத்து கருத்து கேட்ட பின்னர், முறையாக இருக்கிற நிலைமைகளை எடுத்துரைத்தார், அரசுக்கு இருக்கும் பிரச்னைகளை விளக்கி கூறி, இன்னும் ஒரு வாரம் பொறுத்து கொள்ளுங்கள் இன்னும் சில நாட்களில் உரிய தளர்வு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஏ.வி.எஸ் மாரிமுத்து கூறினார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *