சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் புறாக்களுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக ஒருநாள் தவறாமல் உணவளிக்கப்பட்டு வருகிறது.!!!

உலகம், மனிதா்கள் மட்டுமின்றி பல்வகை உயிரினங்களால் ஆனது. கரோனா பெருந்தொற்றும் , தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கமும் இந்த உலகையே நிலைகுலையச் செய்துள்ளது. இந்த அசாதாரண சூழலில் ஆதரவற்ற பொதுமக்களுக்கு தன்னாா்வலா்களும், தொண்டு நிறுவனங்களும், அரசும், அரசியல் கட்சியினரும் உணவு வழங்கி வருகின்றனா். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விலங்குகள் நல ஆா்வலா்கள் பலா் தங்களால் இயன்றவற்றை தெருநாய், பறவைகள் உள்ளிட்டவற்றுக்கு வழங்கி வருகின்றனா். குறிப்பாக சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் லட்சக்கணக்கான புறாக்கள், காகங்கள் மற்றும் நாய்களுக்கு […]

Continue Reading

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார்.!!!

குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கீழ் செயல்படும் ஆவின் பாலகங்களின் வாயிலாக விற்பனைச் செய்யப்படும் பால், நெய் மற்றும் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட விலையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து இன்று அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பால்பண்ணை ஆய்வகங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொத்தமுள்ள 18,600 லிட்டர் பாலையும் பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், பால்கோவா, பாதாம் பவுடர், ஐஸ்கிரீம், சாக்லேட், தயிர் மற்றும் […]

Continue Reading

தில்லியில் கொரோனா தோற்று குறைவு.!!!

தில்லியில் 47 நாள்களுக்குப் பிறகு முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை தினசரி கரோனா பலி எண்ணிக்கை 100-க்குக் கீழ் குறைந்துள்ளது. தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 946 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 78 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 1,803 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,25,592 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 13,89,341 பேர் குணமடைந்துள்ளனர். […]

Continue Reading

தமிழகத்தில் இன்று கொரோனா தோற்று குறைவு.!!!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 28,864 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,73,351 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 28,864 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,537 பேருக்கும், சென்னையில் 2,689 பேருக்கும், ஈரோட்டில் 1,784 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,68,580ஆக உயர்ந்துள்ளது. […]

Continue Reading

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்றுகோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு.!!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (30.5.2021) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், கண்காணிப்பு அலுவலர்கள் திரு.மு.அ.சித்திக், […]

Continue Reading

திருப்பதியில் நாளை 16 மணி நேர சுந்தரகாண்ட பாராயண மகா யாகம்.!

திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேற்று திருமலையில் உள்ள தர்மகிரி வேத விக்னனா பீடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- “கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு நிகழ்வுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 16 மணி நேரம் சுந்தரகாண்ட பாராயண மகா யாகம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் 40 […]

Continue Reading

சசிகலா பேட்டி‘தைரியமாக இருங்கள், கட்சியை சரிசெய்து கொள்ளலாம், நிச்சயமாக வருவேன்’

‘தைரியமாக இருங்கள், கட்சியை சரிசெய்து கொள்ளலாம், நிச்சயமாக வருவேன்’ என தொண்டரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா ‘தைரியமாக இருங்கள், கட்சியை சரிசெய்து கொள்ளலாம், நிச்சயமாக வருவேன்’ என தொண்டரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் அவரின் அரசியல் முடிவு பரபரப்பாக […]

Continue Reading

தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து அதை எங்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் அவற்றை அனைவருக்கும் வழங்குவோம் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.!!!

தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து அதை எங்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் அவற்றை அனைவருக்கும் வழங்குவோம் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கெஜ்ரிவால் தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து அதை எங்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் அவற்றை அனைவருக்கும் வழங்குவோம் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சூழலில் மாநிலங்களுக்காக மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் […]

Continue Reading

முதல்வர் நிவாரணத்துக்கு 100 வயது மூதாட்டி நிதியுதவி: ஒரு மாத குடும்ப ஓய்வூதியம் வழங்கினார்.!!

கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு மதுரையை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒரு மாத குடும்ப ஓய்வூதியத்தை வழங்கினார். மதுரை, பார்க் டவுனை சேர்ந்த ஓய்வு எஸ்ஐ வில்லியம். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போலீஸ் பணியில் சேர்ந்து கடந்த 1956ல் ஓய்வு பெற்றார். மனைவி மெர்சி வில்லியம்ஸ். இவருக்கு தற்போது  100 வயது ஆகிறது. ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த பின்பு மெர்சி வில்லியம்ஸ் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.14,376 பெற்று வருகிறார். […]

Continue Reading

திருவிக நகரில் மதுபானம் பறிமுதல்.”ஓட்டேரி போலீஸ் பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது பெண்கள் தாக்குதல்”.!!!

வீட்டில் பதுக்கி மதுபானம் விற்றவரை மடக்கி பிடித்த போலீசார், அவரது வீட்டில் இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்ய சென்றபோது பெண்கள் சுற்றி வளைத்து தாக்கினர். இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். பெண் சப்-இன்ஸ்பெக்டரை மறித்து வாக்குவாதம் செய்த பெண்கள், சேகரை கைது செய்ய விடாமல் கைகலப்பில் ஈடுபட்ட காட்சி. வீட்டில் பதுக்கி மதுபானம் விற்றவரை மடக்கி பிடித்த போலீசார், அவரது வீட்டில் இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்ய சென்றபோது பெண்கள் சுற்றி வளைத்து […]

Continue Reading