தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று கடலூர் மாவட்டம்,
கடலூர் – புதுவை சாலை, சின்ன கங்கனாங் குப்பத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ள நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட
பகுதிகளை பார்வையிட்டு, வெள்ள நீரை அகற்றும் பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உடன், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் .சி.வெ.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள்
கோ.ஐயப்பன், சபா.இராஜேந்திரன், எம்.ஆர்.இராதா கிருஷ்ணன், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும்
ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன் தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ்நாடு சாலைகள்
மேம்பாட்டு திட்ட இயக்குநர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் .சி.அ. ராமன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள்உடன் இருந்தனர்