வெள்ளம் பாதித்த விழுப்புரம் -மரக்காணம் பகுதிகளில் சேதங்களை அண்ணாமலை பார்வையிட்டார்.!!

தமிழகம்

 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் அனுமந்தை கிராமத்தில், ஃபெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்

இந்தப் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கியிருக்கும் நெற்கதிர்களை, வெள்ளத்திற்குள் இறங்கி எடுத்துக் காட்டிய  பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்ற உறுதி அண்ணாமலை உறுதியளித்தார்
மேலும், இந்தப் பகுதியில், கடந்த ஒரு வாரமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர் உடனடியாக, தமிழக மின்சாரத் துறை, முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, மின்சார வசதி கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.என அண்ணாமலை விவசாயிகளுக்கு உறுதி அளித்தார்.மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று நிர்வாகிகளுடன் சேத விவரங்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *