ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி!
ஜெ.எம் பஷீர் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார்!!
சென்னை டிசம்பர் 17
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 48 தர்காக்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதான வழங்கப்படும் என்று அமைச்சர் நாசர் ஒப்புதலுடன் அறிவித்த ஜெ.எம்.பஷீர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவில் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார் தர்காவின் நிர்வாகிகளான அல்ஹாஜ் ஷாநவா சிருஷ்டி , பரான்சிருஷ்டி முன்னிலையில் தர்காவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்து தமிழக முதல்வர், துணை முதல்வர் பல்லாண்டு காலம் வளமோடும் நலமோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.