அதிமுக தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை மார்ச் 10
சென்னை அடையாரியில் உள்ள கிரௌன் பிளாசா என்ற நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க தே.மு.தி.க இடையே கூட்டணி தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடைபெற்றது.இதில் அதிமுக தரப்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பி.எஸ், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே பழனிசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி , பங்கேற்றனர்.தேமுதிக தரப்பில் அக்கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஷ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதனை தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் அதிமுக தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியபோது.

அ.தி.மு.க அமைத்துள்ள இந்த மெகா கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதியென ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி இமாலய வெற்றி பெறும் வலிமையான கூட்டணி இது என தெரிவித்தார்.

வருகின்ற 17 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடும். அதிமுக தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதிமுக – தேமுதிக எப்போதும் உணர்வுபூர்வமான கூட்டணி கட்சி.
இடைத்தேர்தல் எப்போது தேர்தல் வந்தாலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு அளிக்கும்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேச்சு..
இரண்டு நாட்களில் நல்ல சேதி வரும் என்பதை தான் அன்றைக்கு சொன்னேன்.அதை வேற மாதிரி திசை திருப்பி விட்டார்கள்..
21 சட்டமன்ற இடைத்தேர்தலில் தே.மு.தி.க அதிமுகவுக்கு ஆதரவு அளிப்போம்.உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் அதற்கு பிறகும் இந்த கூட்டணி தொடரும் எனவும் 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
கூட்டணியின் மனநிறைவு என்பது எண்ணிக்கையில் இல்லை.
அ.தி.மு.க – தே.மு.தி.க கூட்டணி மனநிறைவான கூட்டணி.
எங்கள் கூட்டணி தான் மக்களிடையே வரவேற்பு பெற்றிருக்கிறது என தெரிவித்தார்.