சென்னையில் ‘கரன்சி கனவுகள்’ நூல் வெளியீடு !
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார் !
சென்னையில், தன்முனைப்பு எழுத்தாளர் திரு. இராம்குமார் சிங்காரம் எழுதி, யா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் படைத்துள்ள ‘கரன்சி கனவுகள்’ நூலின் முதல் பிரதியை, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி கல்வித் துறையின் மேனாள் துணை இயக்குனர் திரு. அ. மதிவாணன், யா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. எஸ்.பி. அண்ணாமலை ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் திரு. இராம்குமார் சிங்காரம் எழுதியுள்ள ஒன்பதாவது தமிழ் நூல், இதுவாகும். இந்த நூலில் தன்முனைப்பு சார்ந்த 60 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
வளர்ச்சி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கும், உற்சாகமான நடுவயதினருக்கும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு நடைமுறை உதாரணங்கள், கதைகள், சம்பவங்கள் போன்றவற்றின் மூலம் எளிமையான எழுத்து நடையில், கருத்துக்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார், திரு. இராம்குமார் சிங்காரம்.
144 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ. 200 ஆகும். விற்பனை விவரங்களுக்கு, தொடர்பு கொள்க : 98409 96745.