பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்
கண்டித்து கடும் கண்டன ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து செய்தி சேகரிப்பின் போது பாத்திரிக்கையாளர்களை தாக்கி வரும் காவல்துறையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் இணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாலியல் சர்ச்சை புகாரில் சிக்கி கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி இன்று ஶ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இந்த சம்பவத்தை பத்திரிகையாளர்கள் படம் எடுக்கவோ செய்தி சேகரிக்கவோ கூடாது என்று காலையில் இருந்தே விருதுநகர் மாவட்ட காவல்துறை கடும் கெடுபிடிகளை மேற்கொண்டது. தொடர்ந்து ,
செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதலையும் நடத்தி உள்ளனர்.இந்த தாக்குதலில் பல பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் இந்த தாக்குதல் சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களின் கடமையை தடுக்க காவல்துறை துடிப்பது ஏன்? எவர் உத்தரவிற்கு பயந்து காவல்துறை ஏவல்துறையாக செயல்படுகிறது ? என்ற கேள்விகளுக்கு காவல்துறை பதில் தரவேண்டும்என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று காவல்துறையே பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
பத்திரிகையாளர்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் ஒன்று கூடி உரத்த குரலில் காவல்துறையின் தாக்குதலுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க செயலாளர் பாரதி தமிழன் தலைமை தாங்கினார். மற்றும் சங்க நிர்வாகிகள்் அசத்துல்லா, சகாய ராஜ், தொலைக்காட்சி கேமராமேன் சங்கத்தினர். தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர் சங்கத்தினர் உள்பட எராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.