சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.யு.சிஎஸ் ரேஷன் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
தமிழகம் முழுவதும் நேற்று முதல் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரமும், 14 மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.யு.சி.எஸ் ரேஷன் கடையில் இன்று திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.முதல்வரின் திடீர் வருகை கண்டு அப்பகுதியில் சிறிது நேரம் ரேஷன் கடை ஊழியர்களும்.ரேஷன் பொருட்கள் வாங்க வந்தபொது மக்களும். மகிழ்ச்சி அடைந்தனர்.