மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!!
சென்னை செப்டம்பர் 13
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 22 நாடுகள் கலந்து கொள்ளும் பிரமாண்ட கராத்தே போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் அடங்கிய குழு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வரும் செப்டம்பர் 16ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை மலேசியா நாட்டின் கோலாலம்பூர் நகரில் நடைபெற உள்ள 5 வது உலக கொஜு ரியூ கராத்தே போட்டியில் இந்திய சார்பில் கலந்துக் கொள்ள செல்லும் தனிநபர் கட்டா பிரிவில் 33 நபர்களும். குமித்தே பிரிவில் 41 நபர்களும். குழுகட்டா பிரிவில் 5அணிகளும்.குழு குமித்தே பிரிவில் 4 அணிகளும் தமிழ் நாட்டில் இருந்து இந்தியா சார்பில் போட்டியிடுகின்றனர். சுமார் 22நாடுகள் பங்கேற்கும் இப் போட்டி கோலாலம்பூரில் உள்ள டிடிவாங்ஸா உள் விளையாட்டு அரங்கில் உலக கொஜு ரியூ கராத்தே கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த அனைத்து கொஜு ரியூ கராத்தே கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கியோஷி கி.அன்பழகன். சென் சாய் பிரேம் ஆனந்த் மற்றும் சென்சாய் கோபிநாத் ஆகியோர் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த 47 கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் உடன் அ.தி.மு.க கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் எஸ். நீலகண்டன்.பா.சம்பத் பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்