விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பாரத ரத்னா புரட்சித்தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் அவா்களின் திருவுருவச் சிலையை தரமணியில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா் நூலக வளாகத்தில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமையில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்க தலைவா் டாக்டா் வி.ஜி.சந்தோசம், தென்சென்னைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினா் மருத்துவா் ஜெ.ஜெயவா்தன் ஆகியோர் முன்னிலையில் மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார். அருகில் உலகத் தமிழ் ஆராய்ச்சி இயக்குநா் முனைவர் கோ.விசயராகவன், சொல்லின் செல்வா் ஆவடி குமார், எம்.ஜி.ஆா். ஜானகி மகளிர் கல்லூரியின் தாளாளா் திருமதி லதா ராஜேந்திரன், முன்னாள் ஆட்சியாளர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் உடன் உள்ளனா்.
