விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்காக நாசா செல்லும் நாராயணா கல்வி குழும மாணவர்கள்.!!

சென்னை தமிழகம்

விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்காக
நாசா செல்லும் நாராயணா கல்வி குழும மாணவர்கள்.!!

சென்னை மார்ச் 25,

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஆண்டுதோறும் உலகெங்கும் உள்ள பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் இந்த ஆண்டு மனிதர்கள் வாழ பூமிக்கு மாற்றான வாழ்விடம் குறித்து போட்டிகளை நடத்தியது நாசா. இந்தப் போட்டியில் ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான உலகெங்கும் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். உலகெங்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த நாராயணா கல்வி குழுமத்தை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 20 மாணவர்களைக் கொண்ட 6 அணிகள் தேர்வாகியுள்ளது.மேலும் இந்தியா முழுவதும் தேர்வாகியுள்ள அணிகளில் 38% தமிழகத்திலிருந்து அணி தேர்வாகியுள்ளது.

இதுகுறித்து அந்தப் பள்ளியின்
கல்வி அதிகாரி லட்சுமி சம்யுக்தா கூறியதாவது:

இது இந்தப் பள்ளிக்கு மட்டுமல்லாமல் இந்திய தாய் பிற நாட்டிற்கு கிடைத்த பெருமையாகும். உலக மேடையில் இந்தியாவின் கொடி உயரப் பறக்க இந்த மாணவர்கள் ஆற்றியிருக்கும் பணி ஆகச் சிறந்த பணியாகும். இந்த போட்டியில் தேர்வாகி உள்ள 20 மாணவர்கள் வரும் ஜூன் 7 அமெரிக்காவில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக செல்ல உள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான தகவலை தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு வீசி ராமேஸ்வரம் முருகனிடம் தெரிவித்தும் அவர்கள் உடனடியாக எங்கள் பள்ளி மாணவர்களை அழைத்து நேரில் வாழ்த்து கூறினார். மேலும் உலக அளவில் தமிழக மாணவர்கள் இந்தியாவின் கொடியை தாங்கி பிடிப்பது பெருமைக்குரிய ஒன்றாக இருக்கிறது என மாணவர்களை பாராட்டி அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.மேலும் தமிழகத்தின் சார்பில் அனைத்து மாணவர்களும் இதுபோன்ற கல்விக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில்ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *