


தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அ இ அதிமுக வேட்பாளர் டாக்டர்.ஜெ.ஜெயவர்தன் 15/4/2019 மாலை விருகம்பாக்கம் தொகுதி, கோயம்பேடு சிவன் கோயில் அருகில் 127,129 ஆகிய வட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அவர் பிரச்சாரம் செய்த வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். உடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி எம்.எல்.ஏ, பகுதி செயலாளர் மலைராஜன், வட்ட செயலாளர்கள் 127 ஆர்.சேகர், மகேஷ், 129 கசாலி, பி.ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க மாவட்ட செயலாளர் லோகநாதன், தே.மு.தி.க.,ஜே, தினகரன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. சத்தியநாராயணா, புதிய நீதி கட்சி எஸ்.என்.ரமேஷ், புரட்சி பாரதம் ராஜி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்




