உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணியில் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு.!!

சென்னை

 

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதி, 116 வது வட்டம், பெரிய தெருவில் செயல்பட்டுவரும் T.U.C.S சிறு அங்காடியில் தமிழக அரசால் வழங்கப்படும் கொரோனா கால நிவாரண நிதி, மளிகை பொருட்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேருகிறதா என சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். நியாய விலை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் வாங்கிய பொருட்களை திறந்து பார்த்துபொருட்கள் சரியாக உள்ளனவா என சோதனை செய்து பார்த்தார். இவர் திடீரென நியாய விலை கடைக்கு வந்ததை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.ஒரு பெண் வாங்கிய பொருட்களை சரியாக உள்ளதா என சோதனை செய்யும் உதயநிதி ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *