இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் மழைக்காரணமாக நாட்டிங்காமில் நேற்று நடைபெறவிருந்த இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான ஆட்டம் தொடர் மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது.
இந்த ஆட்டம் நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கவிருந்தது. அப்போது மழையில்லை என்றாலும், கடந்த 2 நாட்களாக பெய்துவந்த மழைக்காரணமாக ஆடுகளத்திற்கு பாதிப்பில்லை என்றபோதிலும், மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் அவற்றை உலரவைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், சில மணிநேரங்கள் கழித்து ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஓவர்கள் குறைக்கப்பட்டால் கூட பராவாயில்லை ஆட்டத்தை கண்டுகளிக்கலாம் என்று ஆர்வமுடன் ரசிகர்கள் மைதானத்தில் குழுமியிருந்தனர்.
ஆனால், இதனிடையே யாரும் எதிர்பாராத வகையில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ச்சியாக பெய்துவந்த மழைக்காரணமாக ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்கள் ஆட்டத்தை காணமுடியாத சோகத்துடன் வீடுதிரும்பினர்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் மழைக்காரணமாக ரத்து செய்யப்படும் 4-வது ஆட்டம் இதுதான்