சந்திராயன்-2 விண்கலத்தை
வெற்றிகரமாக வானத்தில் ஏவிய இந்தியாவின் சாதனை
வைகோ பாராட்டு
சந்திராயன்-1 என்ற விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி, தண்ணீர் துளிகளுக்கான வாய்ப்புள்ள செய்தியை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் உலகுக்குத் தந்தனர். இன்று விண்ணில் நடத்தும் அறிவியல் சாகசங்களில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் நான்காவது சாதனை நாடாக இந்தியாவும் இணைந்துவிட்டது.
இப்பொழுது அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் செப்டம்பர் 7ஆம் தேதி நிலவின் இன்னொரு பக்கத்தில் இறங்கி, பல்வேறு அறிவியல் ரகசியங்களைத் தர இருக்கிறது. புவி சுற்று மண்டலத்தில் விண்கலம் தற்போது சுற்றி வருகிறது. இந்த இமாலய சாதனையை நிகழ்த்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளையும், உலகளாவிய மேலும் சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.