தமிழக செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு அரிசி உள்பட மளிகை பொருட்களை தமிழக செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் ஹரிஷ் எல். மேத்தா வழங்கினார்.!!
சென்னை மே 14
100 வருட பழமையான இந்திய செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது. இதன் கௌரவ தலைவராக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோயங் உள்ளார்.தமிழக செஞ்சிலுவைச் சங்கத்தின் கௌரவ தலைவராக தமிழக கவர்னர்பன்வாரிலால் புரோஹித் உள்ளார். இந்த செஞ்சிலுவைசங்கத்தின் அமைப்பு தமிழகத்தில்35 மாவட்டங்களில் 84 கிளைகள் உள்ளது. கொரோனோ பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் தமிழ்நாடு முழுவதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து ரு 50 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். செஞ்சிலுவை சங்கத்தின் குழுவினர்கள் ஒருங்கிணைந்து கொரோனோ பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும், ரேஷன் அட்டை இல்லாதஏழை குடும்பங்களுக்கும்சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கும் அரிசி உள்பட சமையல் பொருட்களையும் மற்றும் காவல்துறை, மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு முக கவசம், கையுறை,சனிடைசர் ஆகியவைகளை வழங்கி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக இந்த ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமிழ் நாடு பத்திரிகை போட்டோகிராபர் சங்க போட்டோகிராபர்கள் 150 பேருக்கு அரிசி, உள்பட சமையல் பொருட்களை தமிழ்நாடு செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் ஹரிஷ் எல்.மேத்தாஎழும்பூரில் உள்ள செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் வழங்கினார். இந்நிகழ்வில் செஞ்சிலுவை சங்க பொதுச்செயலாளர் நசீருதீன்மற்றும் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான பத்திரிகை போட்டோகிராபர்கள் மகிழ்வுடன் நலத்திட்டங்களை பெற்று சென்றுசெஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.