சென்னை திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!!
தொழில் முதலீடுகளை பெறும் வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார்.
அவரை அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், துரைகண்ணு ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், மாஃபா பாண்டியராஜன், பா.வளர்மதி, மாவட்ட செயலாளர் தி.நகர் சத்தியா மற்றும் எம்ல்ஏக்கள், எம்பிக்கள் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.
இதேபோல் விமான நிலையில் ஏராளமான அ.தி.மு.க. வினர் திரண்டு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.