சென்னை விமானநிலையத்தில் ரூ.89 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் மற்றும் ஹவாலா பணம் பறிமுதல். கடத்தல் ஆசாமிகள் 3 போ் கைது.!!
சென்னையிலிருந்து மலேசியாவிற்கு இன்று அதிகாலை செல்லும் ஏா் ஏசியா விமானத்தில் கணக்கில் இல்லாத ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அந்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை தீவிரமாககண்கானித்தனா்.அப்போது திருவாரூரை சோ்ந்த சையத் இப்ராகீம் (36), விருதுநகரை சோ்ந்த அப்துல் அஜீஸ் (51) ஆகிய 2 போ் சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியா செல்லவந்தனா்.அவா்கள் டிரால்பேக்கை சோதித்தபோது, அதில் ரகசிய அறை வைத்து கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணங்கள் யூரோ மற்றும் ஆஸ்திரேயலியா நாட்டு கரண்சிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.அதன் மதிப்பு ரூ.45.4 லட்சம்.இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரணை.
இதையடுத்து மும்பையிலிருந்து ஏா் இந்தியா விமானம் சென்னை உள்நாட்டு முணையத்திற்கு நள்ளிரவில் வந்தது.துபாயிலிருந்து மும்பை வழியாக சென்னை வரும்,அந்த விமானத்தில் கடத்தல் தங்கம் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சுங்கத்துறை அந்த விமான பயணிகளை திடீா் சோதணை நடத்தினா்,அப்போது மும்பையை சோ்ந்த தீபன் அசோக் சுதாா்(33) என்பவா் சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த 6 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனா்.1.19 கிலோ எடை,மதிப்பு ரூ.43.7 லட்சம். அவரையும் கைது செய்து விசாரணை.