தமிழ்நாடு கார் ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் கொரோனோ துவங்கிய நாளில் இருந்து தொடர்ச்சியாக வாழ்வாதாரம் இழந்த ஏராளமான கார் ஓட்டுனர்களுக்கும், ஏழைபெண்களுக்கும் தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்க தலைவர்ஜே.பி.செல்வம் மற்றும் மக்கள் சேவகர் திரு.ரவி அவர்கள் இணைந்து சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள் .அதன் தொடர்ச்சியாக நேற்று ராஜா அண்ணாமலை புரம் தலைமை அலுவலகத்தில் நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் அரிசி,சர்க்கரை,காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை சங்க பைகளில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சி.வி. கே .சதீஷ், எத்திராஜ் கமலக்கண்ணன், ரவிக்குமார் , நாகராஜ், சத்தியேந்திரன் ஆகியோர் சங்க கொடியுடன் கலந்து கொண்டனர்.
