கொரோனா காலத்தில்முதல்வர் எடப்பாடியாரின் சாதனையை ஒப்பிட்டால்.ஸ்டாலின் பெற்ற மதிப்பெண் பூஜ்யம் தான்.!! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேட்டி.!!

சென்னை

 

கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை ஒப்பிட்டு பார்த்தால் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் செய்த பணி பூஜ்யம் தான் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்

சென்னை மாநகராட்சி திருவிகநகர் 6 வது மண்டலத்திற்குட்பட்ட பெரம்பூரில் கொரோனா தொற்றுநோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 136 களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களை அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.
அதே போன்று கொரோனோ தொற்றில் குணமடைந்தவர்களுக்கு பரிசு பெட்டகங்களையும் பழங்களை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.
இதை தொடர்ந்து காய்ச்சல் சிகிச்சை முகாமில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சால்வை அணிவித்து கெளரவப்படுத்தினார். அப்போது அமைச்சர் உதயகுமார் பேசுகையில்

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டகலைக்டர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் ஆலோசனை நடத்துவதோடு அனைத்து மாவட்டங்களிலும் நேரில் சென்று அதிகாரிகளை சந்தித்து , அறிவுரைகளை வழங்கி வருகிறார். சென்னை மாநகரை பொறுத்த வரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 124 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர் இப்போது அவர்களில் 94,ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர், மருந்தே இல்லாத இந்த நோய்க்கு உயிரை பணயம் வைத்து குணப்படுத்தி வரும் மருத்துவர்கள்,களப்பணியாளர்கள்,.செவிலியர்கள் உள்ளிட்ட உங்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட சிறப்பான சீரிய நடவடிக்கையின் காரணமாகவே 87 சதவீதம் பேர் சென்னையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்,. .

இதை தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி

சென்னை திருவிக நகர் மண்டலத்தில் 8610 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர், இதில் 7276 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1070 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை திருவிக நகர் மண்டலத்தில் 20ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 540 பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 2307 தெருக்களில் 1897 தெருக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 544 தெருக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க பட்டு வருகிறது. அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கை காரணமாக திருவிக நகர் மண்டலத்தில் தொற்று என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது 7 சதவீதமாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்று இல்லாத தமிழகமாக மாற்ற தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா கால கட்டத்தில் பொருளதார பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் எந்த மாநிலமும் இல்லாத நிலையில் இந்த கொரோனா கால கட்டத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை 44 தொழிற்நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை செய்துள்ளார். அதே போன்று வேளாண் , கட்டுமானம், தொழில் துறை என அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருவதற்கு முதல்வரின் சீரிய நடவடிக்கையே காரணம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்வர் ஆய்வு மேற் கொள்ள செல்லும் போது அங்கு தொழிற் நிறுவனத்தினர், வேளாண் விவசாயிகள், என பலதரப்பட்டவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என கேட்டறிந்து வருகிறார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் தான் அதிக மழை பொழிவு இருக்கும். ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த ஜூன்1 ம் தேதி ஆக.9ம் தேதி வரை 56 சதவீதம் வரை நமக்கு கூடுதலாக மழை பொழிவு கிடைத்துள்ளது, .

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மூணாறு பகுதிகளில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் வசித்து வந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமனோர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை இந்த கூட்டத்தின் மூலம் தெரிவத்துக் கொள்கிறேன். அதே போன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் மீட்கப்படும் உடல்கள் மிகுந்த சிதலமடைந்தால், அடையாளம் காணப்பட்டு அங்கேயே இறுதி சடங்கு செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்து வருகிறார்,முன்பு மண்டலங்களில் இடையே சில தளர்வுகள் வழங்கப்பட்டன, அதில் ஏற்பட்ட சிரமங்கள் உங்களுக்கு தெரியும், மக்களின் வாழ்வாதாரத்தை பொறுத்து, தேவையான தளர்வுகள் வழங்கப்படும் என்று பொது ஊரடங்கு அறிவிப்பை வெளியிடும்போதே முதல்வர் அறிவித்துள்ளார், அதன் படி ஊரகப்பகுதிகளில் இருக்கும் கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது, இப்போது மாநகராட்சி பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள சிறு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன, உடல்பயிற்சி கூடங்கள் மற்றும் ,ஒட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, தேவையான தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது,

இபாஸ் விவகாரத்தை பொறுத்தவரை நடைமுறையில் சிரமங்கள் இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்வதற்காக இ பாஸ் பெறப்பட வேண்டும், தேவைகள் இன்றி வெளிமாவட்டங்கள் செல்லக்கூடாது என்ற நோக்கத்தோடு தான் இ பாஸ் கொண்டு வரப்பட்டது. மருத்துவம் இறப்பு மற்றும் திருமணம் போன்றவற்றிற்காக இ பாஸ் வழங்கப்படுகிறது,.இப்போது அதனை எளிமைப்படுத்துவதற்காக வருவாய் மாவட்டங்களில் இரு குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன, அந்த குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார் அவர்

இதைத்தொட்ர்ந்து அமைச்சர் உதயகுமாரிடம், திமுகவின் தேர்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவே இ பாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயகுமார், அவர்கள் எந்த பணியும் செய்யவில்லை, எங்கே தேர்தல் பணியை செய்தார்கள், முடங்கி போய் வீட்டில் தான் இருக்கிறார் ஸ்டாலின்,நான் ஆளுங்கட்சியை சார்ந்தவன், அமைச்சர், நான் காழ்ப்புணர்ச்சியோடு பேசுவதாக சொல்லலாம்,

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எத்தனையோ கிலோ மீட்டர் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார், ஆய்வு நடத்துகிறார் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார், ஆனால் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினும்செய்த பணி என்ன, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பணியை ஒப்பிட்டு பார்த்தால் ஸ்டாலினின் செய்த பணி பூஜ்யம் தான், என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார், இந்த நிகழ்ச்சியில் திருவிக நகர் மண்டலத்தின் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அரவிந்தன், முன்னாள் எம்.பி. பாலகங்கா, முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *