தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 24) ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருட்களான காய்கறி கடைகள் உள்ளிட்ட பல கடைகளை மூட அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் மக்களுக்கு தடையின்றி கிடைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, வேளாண் துறை ஐஏஎஸ், தோட்டக்கலைத் துறை ஐஏஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் பொதுவினியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருள்கள் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.