தமிழகத்தில் இன்று புதிதாக 30,016 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,74,349 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 30,016 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,692 போ்பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,705 பேருக்கும், ஈரோட்டில் 1,742 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,39,716ஆக உயர்ந்துள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 31,759 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,06,298-ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 3,10,157 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 486 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,261-ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.