4 லட்சத்து 20 ஆயிரத்து 570 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தற்போது தமிழக மக்கள் மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தடுப்பூசி கையிருப்பு தீர்ந்ததால் தமிழகத்தில் 3-ந் தேதி முதல் 3 நாள் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று கூறினார்.
இந்நிலையில், இன்று மாலை மேலும் 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தடையும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது.
அதன்படி 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இந்த தடுப்பூசியானது மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.