அவரது உரையில் தடுப்பூசி திட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றி, தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக கொடுக்கும் என்று கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
புதுவையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்திருக்கும் காரணத்தினால் மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.
மாநில எல்லையில் உள்ள மதுக்கடைகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மதுபாட்டில்களை வாங்கி கொண்டு செல்கின்றனர். இதனால் கொரோனா 2வது அலை மறுபடியும் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுவையில் கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது என்ற எண்ணத்தோடு மாநில அரசு ஒரு தவறான முடிவை எடுத்து மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் விஷப்பரிட்சையை இந்த அரசு செய்யக் கூடாது.