சாதி சான்றிதழ் கிடைக்காததால் என்னால் கல்லூரியில் சேர முடியவில்லை எனப் பேட்டியளித்திருந்தார் பழங்குடியின மாணவி விஜயலட்சுமி. இந்த செய்தியைக் கண்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாணவி விஜயலட்சுமி மற்றும் அவரது பெற்றோரிடம் அலைபேசியில் பேசி விசாரித்தார். அப்போது பேசிய கனிமொழி எம்.பி, ஆலடி அருணாவின் மகன் எழில் வாணனுக்குச் சொந்தமான ஐன்ஸ்டீன் கல்லூரியில் எந்த ஒரு கட்டணமும் இன்றி மாணவி கல்லூரி படிப்பைத் தொடங்க ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஒரு மாதத்திற்குள் சாதிச்சான்றிதழ் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். அதன் படி அந்த மாணவிக்குக் கல்லூரிப் படிப்பு உறுதியானது.
இன்று ஆலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின மாணவி விஜயலட்சுமி, கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.