சைதாப்பேட்டை உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் அரசு பள்ளியில் மாணவிகளுக்கிடையே, வீபத்திலா தீபாவளி கொண்டாடுவதற்கு
தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு
ஏற்படுத்தினார்கள்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் “வீபத்தில்லா தீபாவளியை” கொண்டாடுவதற்கு
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தென் சென்னை மாவட்டம்
சைதாப்பேட்டை நிலைய அலுவலர் தா.பிரபாகரன் தலைமையில் தீ விபத்திலாத தீபாவளியாக இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும், பட்டாசு வெடிக்கும் போது தீபற்றினால் தீயை அணைக்கும் செயல் விளக்கத்தையும், ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் நபரை மீட்கும் முறையையும் மாணவிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் விளக்கி காட்டினார்கள்.
இதில், முன்னணி தீயணைப்பு வீரர்கள்
ஜா.பழனி, கே.சீனிவாசன் மற்றும் தங்கமாரி,அய்யன் ராஜா, கண்ணன், செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.