தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தி.நகர் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.
ராஜன் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் ராஜன் நேரில் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு ரோஜாஸ்ரீ சங்கரன் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
சங்க நிர்வாகிகள் அமைச்சருக்கு சால்வை போர்த்தி, சென்னை மாநகரின் பழைய புகைப்படத்தை நினைவுப் பரிசாக அளித்தனர். டாக்டர் மோகன் ராஜனுக்கு இந்து புகைப்படக்கலைஞர் ரவி எடுத்த, “கண்ணிற்குள் இந்திய தேசிய கொடி” புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு, பிரிவிலிஜ் கார்டு வழங்கப்பட்டது. இந்த கார்டு மூலம் உறுப்பினர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பரிசோதனை, மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு 50 சதவீத கட்டணத்தில் சிகிச்சை வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசும்போது,
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது எல்லா பயனாளிகளையும் தெரிந்திருக்க, அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இது என் குடும்ப நிகழ்ச்சி.
25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்தும், அதன்கீழ் ஃபுட் நோட் போட்டு யார் கலந்து கொண்டார் என்பதை பத்திரிகைகள் மூலம் மக்களுக்கு சொன்ன, பத்திரிகை புகைப்படக் கலைஞர்களின் நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டிற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அமைச்சர் மற்றும் டாக்டர்.மோகன்ராஜனுடன் சங்க உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
செய்தி தொகுப்பு த.சங்கரன்.
மிிிி