லட்சுமி திரைப்பட இசை வெளியீட்டு விழா: குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் இந்த திரைப்படம் திகழும் என இயக்குனர் ஏ.எல்.விஜய் பேச்சு
சென்னை: ப்ரமோத் பிலிப்ஸ் மற்றும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் வழங்கும் லக்ஷ்மி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சவேரா ஹோட்டலில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக படத்தின் கதாநாயகன் பிரபுதேவா கலந்து கொண்டார்
பின்பு திரைப்பட இயக்குனர் விஜய் அனைவரும் வரவேற்றார்
அதன் பின்பு மேடையில் பேசிய இயக்குனர் விஜய்..
பெண் குழந்தைகள் சோர்ந்து போகாமல் அனைத்துத் துறைகளிலும் சாதிக்க வேண்டும் அதில் எப்படி சாதனை புரிய வேண்டுமென இந்தப் படம் ஒரு முன்னுதாரணமாக திகழும்
குழந்தைகள் மட்டுமல்லாமல் குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து இந்த படத்தை காணலாம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்த படத்தினால் பெண் குழந்தைகளுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்
இந்த திரைப்படத்தில் பெங்களூர் மும்பை கொல்கத்தா ஹைதராபாத் போன்ற சிறுமிகளுக்கு நடன வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது
ஆகையால் வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது, இந்த இந்த திரைப்படத்தை பார்த்து மிகப்பெரிய வெற்றி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்று கூறினார் இயக்குனர் விஜய்.