மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலை சீரமைக்க அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவு திருக்கோயில் அர்ச்சகர்கள் குறைகளையும் கேட்டறிந்தார்.!!

சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆதிகேசவப் பெருமாள்- பேயாழ்வார் திருக்கோவிலில் நேற்று இரவு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோயில் பிரகாரங்கள் மற்றும் அங்குள்ள திருத்தேர்களை ஆய்வு செய்த அமைச்சர் அவர்கள் கோவில் அர்ச்சகர்களிடம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார் . அப்போது அங்கிருந்த கோவில் அர்ச்சகர்கள் அமைச்சர் அவர்களிடம் கோவில் குடமுழுக்கு மற்றும் அடிப்படை வசதிகள் […]

Continue Reading

தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்க நிர்வாகிகள் கனிமொழி எம்பியை சந்தித்தனர்.!!

தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்க நிர்வாகிகள் கனிமொழி எம்பியை சந்தித்தனர்.!! சென்னை ஆகஸ்ட் 8 தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர்கள் சங்க நிர்வாகிகள் திமுக எம்பி கனிமொழியை சந்தித்தனர்.தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்கத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.இதில் வெற்றிபெற்ற மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இச்சங்கத்தின் தலைவர் ஜோதி ராமலிங்கம்,பொதுச்செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் அருண்,ஸ்டாலின்,சஞ்சய் சீனிவாசலு,சுரேஷ்,ரமேஷ் சங்கர், இதயத்துல்லா,வில்லிவாக்கம் சீனிவாசன் திமுக எம்பி கனிமொழி சந்தித்து சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் சங்கத்தின் முக்கியமான தேவைகள் குறித்தும் அவரிடம் பேசினர் போட்டோகிராபர் […]

Continue Reading

சார்பட்டா படக்குழுவினரை பாராட்டிய உலக நாயகன் கமல்.!!.

சார்பட்டா படக்குழுவினரை பாராட்டிய உலக நாயகன். இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது . அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தவிர்க்கமுடியாத வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் பா.இரஞ்சித்,நடிகர் ஆர்யா மற்றும் […]

Continue Reading

பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை இன்று நடந்தது.!!

பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை இன்று நடந்தது.!! பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை இன்று நடந்தது! சேலம் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிப்பில் இயக்குனர் ஷாம் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை விறுவிறுப்பான கதைக்களமாக உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் ஜெ. கெ. ஆர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார் மேலும் இப்படத்திற்கு வி.எஸ் .விஷால் எடிட்டிங் […]

Continue Reading

தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் வெளியிட்டார்.!!

தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் மாவட்ட தலைவர் வெளியிட்டார். தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ‌.முத்தழதன் வெளியிட்டார். சென்னை அசோக் நகரில்,கோகுலம் பார்க்கில்,தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக புதிய நிர்வாகிகள் பட்டியலை,மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் வெளியீட்டார். இந்நிகழ்வில், மாநில பொது செயலாளர் இலா பாஸ்கரன், தென் சென்னை மத்திய மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டியின் தலைவி எஸ்.உமா […]

Continue Reading

தனது மனைவியின் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய பிக் பாஸ் புகழ் ஆரி அருஜுனன்..!!

தனது மனைவியின் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய பிக் பாஸ் புகழ் ஆரி அருஜுனன்..!! நடிகர் ஆரி அர்ஜுனன் தனது மனைவி நாதியாவின் பிறந்தநாளை நேற்று இரவு மிக எளிமையாக கொண்டாடினார். இதில் நதியாவிற்க்கு சர்ப்ரைஸாக இருக்க நதியாவின் நண்பர்களை ஆரி அருஜுனன் அழைத்திருந்தார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணத்தில் வந்த எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாம் தாங்கிக்கொண்டு தன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு இந்த பிறந்தநாளை கொண்டாடி ஒரு இன்ப அதிர்ச்சி […]

Continue Reading

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்1,000 புத்தகங்களை சென்னை எழும்பூர், கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கினார்.!!

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று1,000  புத்தகங்களை சென்னை எழும்பூர், கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க.தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தன்னை சந்தித்து வாழ்த்துகூற வருபவர்கள் பொன்னாடை, பூங்கொத்துகளை தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்கிட வேண்டுமென வைத்த வேண்டுகோளினையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட 80,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலங்களுக்கு வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தன்னை வாழ்த்துக் கூற வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,000 […]

Continue Reading

திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 119வது வட்டசெயலாளர் மோகன் திமுக கழக அலுவலகத்தை மாவட்ட செயலாளர் நா.சிற்றரசு திறந்துவைத்தார்.!!

சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில்; திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 119வது வட்டக் கழக செயலாளர் மோகன் அவர்களின் வட்டக் கழக அலுவலகத்தை மாவட்ட செயலாளர் நா. சிற்றரசு திறந்துவைத்தார். மேலும் அந்த வட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ARPM.காமராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்….

Continue Reading

எழும்பூர் மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்கள் 68 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்தார்.!!

எழும்பூர் மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்கள் : 68 பேருக்கு கொரோனா தடுப்பூசி சென்னை.ஜீன்.27- எழும்பூர் தாய் சேய் நலமருத்துவமனையில், பாலூட்டும் தாய்மார்கள் 68 பேர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. எழும்பூர் தாய் சேய் […]

Continue Reading

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று சமூக இடைவெளியுடன் எளிமையாக நடைபெற்றது.!!

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று எளிமையாக சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக காலை 11.15க்கு […]

Continue Reading