நீங்களும் தொடங்கலாம் ஸ்நாக்ஸ் கஃபே சொல்கிறார் ” முதுகலை பட்டதாரி இளைஞர் பிரதீப் குமார் !!

சென்னை

 


சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தமிழ்ச்சாலையில்
ஸ்நாக்ஸ் கஃபே ஒன்று இருக்கிறது.
இந்த கடையை இரவு நேரங்களில் பார்த்தால் சாலையோரங்களில் செல்வோர் ஒரு நிமிடம் நின்று ரசித்து விட்டு தான் செல்வார்கள். ஏனென்றால் கலர்கலராக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த கடை ஜொலிக்கும். எப்போதுமே கடையில் கூட்டம் அலைமோதும்.
அதுமட்டுமின்றி,
” சிறுதொழில் செய்வீர் ” என்பதற்கு உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில் வாழும் இளைஞர்களுக்கு முன்உதாரணமாக திகழும், எம்.எஸ்.சி. உணவு வேதியியல் மற்றும் உணவு பதப்படுத்துதல் படித்த முதுநிலை பட்டதாரி இளைஞர் ர.பிரதீப் குமார் (வயது 29) என்பவர் தான் இந்த கடையின் உரிமையாளர்.
ஆச்சரியமாக உள்ளதா, எனக்கும் அப்படித்தான் இருந்தது.
இதுதொடர்பாக அவரை நேரில் சந்தித்து பேசினோம். அப்போது கடை உரிமையாளர் பீரதீப் குமார் கூறியதாவது :-

எனக்கு வியாபார ஆரம்பிக்கும் எண்ணம் எப்படி வந்ததுன்னு பார்த்தீங்கன்னா நான் பட்டப் படிப்பு முடித்த உடனே எனக்கான வேலைவாய்ப்புக்கான சூழ்நிலைகளை விட வியாபார வெற்றிக்கான ஒரு சூழ்நிலைகள் இருக்கிற மாதிரி நான் உணர்ந்தேன். அதனால், தான் வியாபாரம் ஆரம்பித்தேன்.
அதுமட்டுமின்றி, பணம் வாய்ப்பு நிறைந்தவர்கள் மட்டும் விலை உயர்ந்த உணவுகளை உண்ண முடியும் என்ற எண்ணத்தை மாற்றி, குறைந்த விலையில் உயர்தர தரமான உணவுகளை குறைந்த விலையில் உண்ண வேண்டும். என்ற எண்ணத்திலும் இந்த கடையை ஆரம்பித்தேன்.

என்னுடைய தொழிலிக்கு
எனக்கு உறுதுணையாக இருப்பது என்னுடைய விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் மட்டும் தான்.
தற்போதைய கொரோனா காலத்தில் வியாபாரம் தாக்கு பிடிக்குற அளவுக்கு இருக்கிறது. தத்தளிக்க அளவுக்கு ஒன்னும் ரொம்ப மோசமான இல்லை.

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், கடைக்கு வரும் வாடிக்கையாளரை வாடிக்கையாளராக மட்டும் பார்க்காமல். நம்ம வியாபாரத்துக்கு ஒரு வாய்ப்பு தருபவராக பார்க்கணும்.
அப்படி பார்த்தால் நம் தொழில் கண்டிப்பாக வெற்றியின் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தேவையானதை வாங்கிவிட்டு அல்லது பருகிவிட்டு செல்லும்போது, அவர்களது எண்ணத்தில் கடையை பற்றிய உணர்வுகள், பருகிய பானங்கள் பற்றிய குறிப்புகள் தெரிவிப்பதர்க்கு, கடையில் பதாகைகள் ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.
அதில் அவர்கள் குறிப்புகளை எழுதிவிட்டு செல்லலாம்.
அதன் மூலம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற்போல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
இதனால், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த தொழிலை ஆரம்பிக்க
குளிர் சாதன பெட்டி,மிக்சி,ஃப்ரீஸ்ர்,டோஸ்டர்,பழ வகைகள், பொதுவான அளவு இடவசதி வேண்டும்.
இந்த தொழிலை ஆரம்பிக்க
தனியார் பைனான்ஸ், வங்கி மூலமாக லோன் பெற்று கடையை ஆரம்பிக்கலாம்.
மேலும், குறைந்த பட்சம்
முதலீடு தொகை 25 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும்,
எங்களது கடையில், வட நாடுகளில் கிடைக்கும் பர்கர், பிட்சா,சன்வெஜ்,மில்சேக்,-ல் இருந்த்து
வட இந்திய உணவுகளான பானிபூரி, மற்றும் அனைத்து வகையான பழங்களின் ஜூஸ் , லேசி, உள்ளிட்ட உணவுகள் கிடைக்கும்.
குறிப்பாக, அனைத்து உணவுகளும் உடனடியாக 5 நிமிடங்கள் புதிதாக செய்து தரப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.மேலும்,
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த போன் பே, கூகுள் பே போன்ற இணைய வசதிகளும் உள்ளது.
எனது கடையின் பெயர் ” தி பெப்பர் ப்ஃரை”
விடாமுயற்சி, கடின உழைப்பும் இருந்தால் நீங்களும் இதுபோன்ற சிறு தொழில்கள் ஆரம்பித்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *