ப.சிதம்பரத்தை டெல்லியில் அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்றது சி.பி.ஐ.!!

  ப.சிதம்பரத்தை டெல்லியில் அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்றது சி.பி.ஐ.!! ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அழைத்து செல்லப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் இருந்து சிபிஐ போலீசார் அழைத்து வந்தபோது அந்த காரை காங்கிரஸ் தொண்டர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். சிபிஐ விசாரனைக்குப் பிறகு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. அப்படி ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டால் […]

Continue Reading

பா. சிதம்பரம் டெல்லியில் திடீர் செய்தியாளர் சந்திப்பு.!!

பா. சிதம்பரம் டெல்லியில் திடீர் செய்தியாளர் சந்திப்பு.!! அவர் பேட்டியில் கூறியதாவது கடந்த 15 மாதத்திற்கு மேலாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் இருந்தேன். ஐ.என்.எஸ் மீடியா வழக்கைப் பொருத்தவரை நானோ என் குடும்பத்தினரோ குற்றவாளி அல்ல – ப.சிதம்பரம் பேட்டி. சிபிஐ போட்ட எப்.ஐ.ஆரிலும் என் பெயர் இல்லை கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் இருந்தேன். நேற்றும் இன்றும் நீதிமன்றத்தை அணுகினோம். நான் எங்கும் தப்பி ஓடவில்லை. தொடர்ந்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன். இந்த […]

Continue Reading

பிக் பாஸில் கலந்து கொண்டதற்காக அதிக சம்பளம் வேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்வேன் மதுமிதா மிரட்டல்.!!

பிக் பாஸில் கலந்து கொண்டதற்காக கூடுதல் சம்பளம் தர வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என நடிகை மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், மாதிரி கருத்து கணிப்பில் டைட்டில் வின்னர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் மற்றும் ரிகோக்னைஸ் ஹர் எக்சுபோ & அவார்டுஸ் 2020 இணைந்து மகளிருக்கான ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது.!!

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் மற்றும் ரிகோக்னைஸ் ஹர் எக்சுபோ & அவார்டுஸ் 2020 இணைந்து மகளிருக்கான ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் ஜே. பி. செல்வம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் வரலட்சுமி, சுப்புலட்சுமி மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது.!!

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது.!! சென்னை ஆகஸ்ட் 17 சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது.சென்னையில் பாரிமுனை, துறைமுகம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், கிண்டி,அசோக்நகர், […]

Continue Reading

சென்னையில் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் காதல்ஜோடி போலிஸ் அதிர்ச்சி.!!

சென்னையில் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் காதல்ஜோடி ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் பிரசன்னா லிப்ஷா என்பவர் தேனாம்பேட்டையில் காலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துச் சென்றிருக்கின்றனர். அதில் பின்னால் உட்கார்ந்திருந்தவர் பெண் என்றும், வாகனத்தை ஓட்டியவருக்கு வயது 25 இருக்கும் என்றும் பிரசன்ன லிப்ஷா காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருந்தார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது ஜோடியாக வாகனத்தில் […]

Continue Reading

தன் கழுத்திலிருந்த சங்கிலியை பறித்த திருடனை பாய்ந்து பிடித்த வீரப் பெண்மணியை சென்னை கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு.!!

துணிச்சலுடன் சங்கிலி பறிப்பு குற்றவாளியை மடக்கிப் பிடித்த M.தனலஷ்மி அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை, காட்டுப்பாக்கம், விஜயலெட்சுமி நகர், எண்.1/2 என்ற முகவரியில் M.தனலஷ்மி, வ/50, க/பெ.மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 27.07.2019 அன்று இரவு 09.30 மணியளவில் கடைக்கு சென்று வீட்டுக்கு செல்ல இந்திராநகரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக TN 05 E 6288 பதிவெண் கொண்ட Splendor + இருசக்கர […]

Continue Reading

பேருந்தில் காணாமல் போன செல்போனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசார்.!!

பேருந்தில் காணாமல் போன செல்போனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசார்.!! சென்னை ஜூலை 27 சென்னை நுங்கம்பாக்கத்தில் பஸ்ஸில் காணாமல் போன செல்போனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு காவல்துறையினர். சென்னை பெரம்பூர் புது வாழை மாநகரை சேர்ந்தவர் திலிப் குமார் இவர் பணி நிமித்தமாக பெரம்பூரிலிருந்து 29C பேருந்தில் நுங்கம்பாக்கம் வந்தார் புட் கார்பரேஷன் இந்தியா பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்த […]

Continue Reading

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.!! அவர் தனது மந்திரிசபையில் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை மந்திரி பதவியை இந்திய வம்சாவளிப்பெண்ணான பிரித்தி பட்டேலுக்கு (வயது 47) வழங்கினார். இதன்மூலம் இங்கிலாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவளி உள்துறை மந்திரி என்ற பெயரை இவர் பெறுகிறார்.இவர் லண்டனில் 1972–ம் ஆண்டு மார்ச் மாதம் 29–ந் தேதி குஜராத்தை பூர்விகமாக கொண்ட சுஷில், அஞ்சனா பட்டேல் தம்பதியரின் மகளாக பிறந்தவர். முந்தைய தெரசாமே […]

Continue Reading

உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் முதல் பெண்மணி..மலேசியச் சிறை இலாகாவின் முதல் பெண் துணை இயக்குநர் கௌசல்யா தேவி.!!

உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் முதல் பெண்மணி..மலேசியச் சிறை இலாகாவின் முதல் பெண் துணை இயக்குநர் கௌசல்யா தேவி.!! மூர்க்கத் தனத்தில் மூச்சுவிடும் முரட்டுக் கைதிகளுக்கு மத்தியில் தோள் உயர்த்தி மிடுக்காய் வலம் வருபவர். வன்முறைகளில் சிகரம் பார்த்த கைதிகளுக்கு மத்தியில் துணிச்சலின் வடிவமாய் பவனி வருபவர். தூக்குத் தண்டனை கைதிகளின் துக்கத்திலும் ஒரு சகோதரியாய்ப் பயணிக்கின்றவர். அவர் தான் மலேசிய சிறை இலாகாவின் கைதிகள் நிர்வாகப் பிரிவின் துணை இயக்குநர் (Deputy Commissioner of Prisons, […]

Continue Reading