பாகிஸ்தான் சிறையில் சலுகைகளை மறுத்தார் நவாஸின் மகள் மரியம்

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் சிறப்பு சலுகைகளை மறுத்துள்ளார். லண்டனில் சட்டவிரோதமாக வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. லண்டனில் தங்கியிருந்த இருவரும் கடந்த 13-ம் தேதி பாகிஸ்தான் திரும்பினர். லாகூர் விமான நிலையத்தில் அவர்களை போலீஸார் கைது செய்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைத்தனர். சிறையில் […]

Continue Reading

112 எம்எல்ஏ.க்களை எதிர்த்து விவசாயிகள் ம.பி.யில் பிரச்சாரம்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விவசாய அமைப்பான ஆம் கிசான் யூனியன் தலைவர் கேதார் சிரோஹி கூறியதாவது: ”ம.பி. சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆதரவில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பலர் சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசவில்லை. அதுபோல, விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி பேசாத 112 எம்எல்ஏக்களை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு எதிராக விவசாயிகள் பிரச்சாரம் செய்வார்கள். இந்த 112 எம்எல்ஏ.க்களின் 86 பேர் பாஜகவைச் […]

Continue Reading

சட்டம் ஒழுங்கைக் காப்பதில் பாஜக தோல்வி: கேஜ்ரிவால் காட்டம்

புதுடெல்லியில் சட்டம் ஒழுங்கைக் காப்பதில் பாஜக முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று தெரிவித்தார். ட்விட்டரில் கேஜ்ரிவால் பதிவு வருமாறு: ”புதுடெல்லியில் சட்டம் ஒழுங்கு இன்றைய தினம் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது. பாஜக முற்றிலும் தோல்வியடைந்துள்ளது” என்று கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லியில் ஆம் ஆத்மி அரசு நிர்வாகம் செய்துவந்தாலும் போலீஸ் துறையைப் பொறுத்தவரை மத்திய அரசு தன்னிடமே வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரு தற்கொலை நிகழ்வுகளுக்குப் பிறகு அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். மேற்கு டெல்லி […]

Continue Reading

பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு 10 பைசா வீதம் குறைந்தன

10 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 பைசா குறைந்துள்ளது. புதுடெல்லியில் மட்டும் 11 பைசா குறைந்துள்ளது. நாட்டின் நான்கு மிகப்பெரிய மாநகரங்களில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை ஒரு ரூபாய் மற்றும் 50 பைசா என உயர்ந்தது. டீசலின் விலை 13-15 பைசா அளவிற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்தன. எரிபொருள் விலை கடந்த ஜூன் 5 லிருந்து மேல்நோக்கியே போய்க் கொண்டிருந்தது. குறைவதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இணையதள தகவலின்படி […]

Continue Reading

கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் நீண்டஇடைவெளிக்கு பின் ஒரு கண்ணியமான படம் என்று சொன்னால் அது கடைக்குட்டி சிங்கம் என்று மார் தட்டி சொல்லலாம். எந்த வித ஆபாசம் இல்லாமல் குடும்படித்தோடு கட்டாயம் பார்க்கவேண்டிய படம். பாசம் கூட்டு குடும்பம் எல்லாம் அழிந்து போகும் காலத்துக்கு இது ஒரு முட்டுக்கட்டை என்றும் சொல்லலாம். இது அரசியல் படமா காதல் படமா விவசாயம் படமா இல்லை குடும்ப படமா இல்லை நகைசுவை படமா என்று கேட்டால் எல்லாம் உள்ள ஒரு தரமான […]

Continue Reading

ஹீரோவாக நடிக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்

தருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு காக்கா’. காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் தயாராகியிருக்கிறது. வசந்த் மற்றும் பிரகாஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். டேனியல், ‘ராட்டினம்’ சுவாதி, ஜார்ஜ், அஞ்சலி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதப்போன ஒருவரின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் […]

Continue Reading

தமிழ் படம் 2- திரை விமர்சனம்

ஒரு கிராமத்தில் நடக்கும் சாதிக் கலவரத்துடன் படம் தொடங்குகிறது. கலவரத்தை அடக்க முடியாமல் காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை விழி பிதுங்கி நிற்க, காவல்துறையின் முன்னாள் ஊழியர் சிவாவின் உதவியை நாடுகின்றனர். வசனம் பேசியே கலவரத்தை அடக்கிவிடுகிறார் சிவா. இதற்கிடையில், சிவாவின் மனைவி திஷா பாண்டேவை வில்லன் சதீஷ் கொன்றுவிடுகிறார். அவரைப் பழிவாங்குவதற்காக காவல்துறையில் துணை ஆணையராக சேர்கிறார் சிவா. பின்னர், ஐஸ்வர்யா மேனனை காதலிக்கிறார். அவரையும் வில்லன் கொன்றுவிட, பழிதீர்க்கும் வெறி அதிகமாகிறது. அதில் […]

Continue Reading

தெலுங்கில் கால் பதிக்கும் வித்யா பாலன்

பெங்காலி படத்தின் மூலம் 2003-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் வித்யா பாலன். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் அவர் நடித்த ‘களரி விக்ரமன்’ படன் இன்றுவரை ரிலீஸாகவில்லை. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ‘பரினீடா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டாக, பாலிவுட்டில் அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு தென்னிந்திய மொழிகளில் வித்யா பாலனை நடிக்கவைக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தில், ராதிகா ஆப்தே கேரக்டரில் நடிக்க […]

Continue Reading

அஞ்சலி படத்தில் யோகிபாபு

ராஜு விஸ்வநாத் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லிசா’. இந்தியாவிலேயே ஸ்டீரியோஸ்கோப் 3டி டெக்னாலஜியில் உருவாகும் முதல் படம் இது. ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் படம் இது. இவர் ஏற்கெனவே ‘ராஜா மந்திரி’ படத்தைத் தயாரித்துள்ளார். ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், அஞ்சலி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் ஜோன்ஸ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பிரபல எழுத்தாளரான மகரந்த் தேஷ்பாண்டே, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் யோகிபாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். […]

Continue Reading