ஆசிய பங்கு சந்தைகளை கைப்பற்றும் டிராகன்

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை வேறொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ வாங்கமுடியும் என்பது நாம் முன்னரே அறிந்த செய்திதான். ஆனால் ஒரு நாட்டின் பங்கு சந்தையையே வேறொரு நாட்டின் பங்கு சந்தை வாங்க முடியும் என்றால் நம்பத்தான் வேண்டும். இதனை டீமியூச்சுவலைசேஷன் என அழைக்கிறார்கள். நீண்டகாலமாக நடந்துவரும் இப்படியான வர்த்தகத்தில்தான் தற்போது சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. பங்குச் சந்தையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை மாற்றியமைத்து, ஒரு நிறுவனம் குறிப்பிட்ட பங்கு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இந்த செயல்பாடு […]

Continue Reading

ஆப்கனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 11 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் ஆப்கன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலியாகினர்.  4 பேர் காயமடைந்தனர்.  வெள்ளிக்கிழமை இரவிலிருந்து இந்தத் தாக்குதல் நடந்து வருகிறது. ராணுவ வீர்ர்கள் நடத்திய பதில் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 13 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை தலிபான்கள் […]

Continue Reading

ராவல்பிண்டி சிறையில் நவாஸ் அடைப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (68) ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகள் மரியம் (44) அதே சிறையின் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டார். லண்டனில் சட்டவிரோதமாக 4 வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு கடந்த 6-ம் தேதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதே வழக்கில் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகளும் மரியத்தின் கணவர் கேப்டன் சப்தாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. […]

Continue Reading

பாகிஸ்தான் சிறையில் சலுகைகளை மறுத்தார் நவாஸின் மகள் மரியம்

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் சிறப்பு சலுகைகளை மறுத்துள்ளார். லண்டனில் சட்டவிரோதமாக வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. லண்டனில் தங்கியிருந்த இருவரும் கடந்த 13-ம் தேதி பாகிஸ்தான் திரும்பினர். லாகூர் விமான நிலையத்தில் அவர்களை போலீஸார் கைது செய்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைத்தனர். சிறையில் […]

Continue Reading

112 எம்எல்ஏ.க்களை எதிர்த்து விவசாயிகள் ம.பி.யில் பிரச்சாரம்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விவசாய அமைப்பான ஆம் கிசான் யூனியன் தலைவர் கேதார் சிரோஹி கூறியதாவது: ”ம.பி. சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆதரவில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பலர் சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசவில்லை. அதுபோல, விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி பேசாத 112 எம்எல்ஏக்களை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு எதிராக விவசாயிகள் பிரச்சாரம் செய்வார்கள். இந்த 112 எம்எல்ஏ.க்களின் 86 பேர் பாஜகவைச் […]

Continue Reading

சட்டம் ஒழுங்கைக் காப்பதில் பாஜக தோல்வி: கேஜ்ரிவால் காட்டம்

புதுடெல்லியில் சட்டம் ஒழுங்கைக் காப்பதில் பாஜக முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று தெரிவித்தார். ட்விட்டரில் கேஜ்ரிவால் பதிவு வருமாறு: ”புதுடெல்லியில் சட்டம் ஒழுங்கு இன்றைய தினம் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது. பாஜக முற்றிலும் தோல்வியடைந்துள்ளது” என்று கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லியில் ஆம் ஆத்மி அரசு நிர்வாகம் செய்துவந்தாலும் போலீஸ் துறையைப் பொறுத்தவரை மத்திய அரசு தன்னிடமே வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரு தற்கொலை நிகழ்வுகளுக்குப் பிறகு அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். மேற்கு டெல்லி […]

Continue Reading

பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு 10 பைசா வீதம் குறைந்தன

10 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 பைசா குறைந்துள்ளது. புதுடெல்லியில் மட்டும் 11 பைசா குறைந்துள்ளது. நாட்டின் நான்கு மிகப்பெரிய மாநகரங்களில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை ஒரு ரூபாய் மற்றும் 50 பைசா என உயர்ந்தது. டீசலின் விலை 13-15 பைசா அளவிற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்தன. எரிபொருள் விலை கடந்த ஜூன் 5 லிருந்து மேல்நோக்கியே போய்க் கொண்டிருந்தது. குறைவதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இணையதள தகவலின்படி […]

Continue Reading

ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்தது அமமுக

சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில், ஸ்ரீரங்கம் தொகுதிக்கான வேட்பாளரை அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாங்கோயில் பகுதியில் நேற்று முன்தினம் அவர் பேசும்போது, “தமிழகத்தில் மக்கள் விரோத துரோக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முட்டை வழியாக துரோக ஆட்சியின் ஊழல்கள் தற்போது வெளிப்பட்டு வருகின்றன. இந்த ஊழல் நிச்சயம் அணுகுண்டாக மாறி மக்கள் விரும்பாத இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும். ஜெயலலிதாவின் ஆட்சியை அமமுக அமைக்கும். அந்த ஆட்சி […]

Continue Reading

பைக்கில் லிப்ட் கொடுத்தவரிடம் கத்திமுனையில் பணம் பறித்த இளைஞர் கைது

பைக்கில் லிப்ட் கொடுத்த ஜவுளிக்கடை ஊழியரிடம் கத்திமுனையில் பணம் பறித்த இளைஞர் கைது செய்யப் பட்டார். நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் மோசஸ் (19). இவர் அசோக்நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு வழக்கம்போல் பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். போகும் வழியில் இளைஞர் ஒருவர் பைக்கில் லிப்ட் கேட்டார். மோசஸும் பரிதாபப்பட்டு தனது பைக்கில் அந்த இளைஞரை ஏற்றிக் கொண்டார். அசோக் பில்லர் […]

Continue Reading

தமிழகம் முழுவதும் 29 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 29 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம், ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வேலூர் சிபிசிஐடி பிரிவில் இருந்த ஏ.அண்ணாதுரை, திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரையில் நில மோசடி தடுப்பு பிரிவில் பணி செய்த டி.கணேசன் சேலம் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு மாற்றலாகி உள்ளார். சேலத்திலிருந்த என்.பிரேமானந்தன் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரியில் பணியாற்றி வந்த எஸ்.ராஜகுமார் தருமபுரிக்கு மாற்றலாகி உள்ளார். தருமபுரியில் பணியாற்றி வந்த பி.அன்புராஜ், திருவாரூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். […]

Continue Reading