மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் திமுக மீது கடும் தாக்கு.!!

தமிழகம்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெறும் ரோட்ராக்டின் வருடாந்திர விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அரசியல் மாணவர்களுக்கு வேண்டாம் என்று சொல்வது மடத்தனம் என்று ஜாதியை சொல்லிக்கொள்வதில் சந்தோசப்படாமல் இருங்கள். அங்கிருந்துதான் கலவரம் தொடங்குகிறது

தமிழன் என்பது விலாசம். தகுதி அல்ல. என்ன செய்தோம் என்பதுதான் தகுதி.
சினிமாலயும் இருக்கீங்க அரசியலுக்கும் வறீங்க என்று கேட்கிறீர்கள். ஓட்டான்டிதான் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்தீர்களானால் சுரன்டிவிடுவார்கள்
என் பங்களிப்பை செய்து விட்டேன் உங்கள் பங்களிப்பை கேட்பேன். சட்டையெல்லாம் கிழிச்சிக்கிட்டு நிக்கமாட்டேன்.நான் சட்டசபையில் சட்டைய பிச்சிக்கிட்டு நிக்கமாட்டேன்.அப்படி கிழிஞ்சு போனாலும் வேற சட்ட மாத்திக்கிட்டு வெளில வருவேன்.
ஐயப்பனின் டிஎன்ஏவிலேயே பெண்கள் இருக்கிறார்கள்.
பிரம்மச்சாரி பெண்களையே பார்க்கக்கூடாது என்றால், அம்மா
நிறையபேர் படம் பார்க்கக்க வந்தால் எனக்கு சந்தோஷம். அதுபோல நிறைய பேர் வந்தால் ஐயப்பனும் சந்தோஷப்படுவார்.டெல்லியில் யார் வந்தாலும் அது தமிழகத்தை பாதிக்கும். நான் அங்கு போனால் தமிழகம் பாதிக்காது. அதற்காக நான் போக வேண்டும்.இத்தனை வருடம் கிராம சபை இருப்பது உங்களுக்க தெரியாதா. நேற்று வந்த சின்ன பயல் செய்ததும் காப்பி அடிக்கிறீங்க, வெக்கமா இல்ல உங்களுக்கு
மீசையை முறுக்கி தொடையை தட்டிவிட்டு கோதாவில் இறங்கமாட்டேன் என்று சொன்னால் மதிக்கமாட்டார்கள். கட்சியை தொடங்கிவிட்டு அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லக்கூடாது.புது ஷீவை மாட்டிக்கொண்டு கூட்டணி எனும் அழுக்கு குட்டைக்குள் இறங்கி அழுக்காக்கிக்கொள்ளமாட்டேன் என கமல்ஹாசன் பேசினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் பேட்டி அளித்தார்…
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை இப்போதே முடிவு செய்ய வேண்டும்: கமல் முழுநேர அரசியல்வாதியாக யாரும் இருக்க முடியாது என்றும் அரசியலையே மட்டும் நம்பி வருவோர் நாட்டை சுரண்டுவார்கள் என்றும் கமல் கூறியுள்ளார். இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். நான் தாமதமாக அரசியலுக்கு வந்ததை நினைத்து வருந்துகிறேன் என்றும் கமல் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *