முன்பு ரூ. 5 லட்சமாக இருந்த இழப்பீட்டுத் தொகை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3000லிருந்து ரூ.5000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.குமரியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
தொடர்மழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரையை கடந்தது ‘யாஸ்’ புயல்: ஒடிசா – மேற்குவங்கம் இடையே யாஸ் புயல் கரையை கடந்தது. பலத்த காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதுடன், கடலோர பகுதிகளில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
முழு ஊரடங்கால் பலன்: முழு ஊரடங்கால் பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். மேலும் தேவையெனில் முழு ஊடரங்கு நீட்டிக்கப்படலாம் என்றும் சூசக கூறியுள்ளார்.தமிழகத்தில் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை: இந்தியாவில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் இதுவரை 236 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காரணமாக அரசியல் தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட வழக்குகளை தவிர 38 வழக்குகளை திரும்பப் பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
மழையில் நனைந்த 15 ஆயிரம் நெல்மூட்டைகள்: விழுப்புரம் மாவட்டத்தில் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் உடனடியாக கொள்முதல் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளி முதல்வரிடம் 2ஆவது நாளாக விசாரணை: பாலியல் குற்றச்சாட்டில் ஆசிரியர் ராஜகோபாலன் கைதான விவகாரத்தில் பள்ளி முதல்வரிடம் 2ஆவது நாளாக இன்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சரிந்து விழுந்த தடுப்பு அகற்றம்: சென்னை கிண்டி-போரூர் சாலையில் கட்டுமானப்பணிக்காக அமைக்கப்பட்ட தடுப்பு அகற்றப்பட்டுள்ளது. மின்சார வயர்கள் மீது தடுப்பு சரிந்து விழுந்த நிலையில் அதிகாரிகள் அதை அகற்றியுள்ளனர்
இந்த நாளை கருப்பு தினமாக அனுசரிப்பதால், டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுக: விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள், உணர்வுகளை மதித்து 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.