விஜய் டி.வி சூப்பர் சிங்கர் டாக்டர் பிரியங்கா-ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பிரசாத் குமாருடன் இணைந்து கேம்ப் புரடக்ஷன் “உசிரே நீதாண்டி” என்ற இசை வீடியோவில் பாடியுள்ளார்.!!

விஜய் டி.வி சூப்பர் சிங்கர் டாக்டர் பிரியங்கா-ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பிரசாத் குமாருடன் இணைந்து கேம்ப் புரடக்ஷன் “உசிரே நீதாண்டி” என்ற இசை வீடியோவில் பாடியுள்ளார்.!! ஆஸ்திரேலியா தலைநகர் மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ் இளைஞர் பிரசாத் இவர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்துகொண்டே பல்வேறு இசைக்குழுவில் பாடிவருகிறார்.கனவே கலையாதே,காற்றெல்லாம் காதல் திருநாள்,அன்னையர் தினத்திற்காக அன்னையை போற்றும் தாய் மனசு, சினேகிதன், உள்பட 15க்கும் மேற்பட்ட தமிழ் இசை ஆல்பங்களில் பாடி இருக்கிறார். […]

Continue Reading

“நீட் தேர்வு விவகாரம் குறித்து சட்டமன்றம் கூடிய பிறகே முடிவு” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.!!!

தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதன்படி மாநில கல்வி அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]

Continue Reading

அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் விவகாரம் காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் ஓ.பி.எஸ் மீது அமைச்சர் சேகர் பாபு கடும் தாக்கு !!

அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு, அதுபோன்று யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார் என்றும், காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று ஓ.பன்னீர் செல்வத்தை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கடுமையான விமர்சித்துள்ளார்.   சென்னை கே.கே.நகர் பகுதியில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் இணைந்து 1000 மூன்று சக்கர, நான்கு […]

Continue Reading

வட மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்து தமிழகத்தில் ஏற்படாதவாறு தமிழக மருத்துவமனை மற்றும் கொரேனோ சிகிச்சை மையங்கள் பாதுகாப்பு குறித்து தீயணைப்புத்துறை இயக்குனர் முனைவர் சைலேந்திர பாபு காணொளி மூலம்கருத்தரங்கில் தமிழக தீயணைப்பு துறையை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.!!

உலகையே அச்சுறுத்தும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மும்பை, விஜயவாடா, ராஜ்கோட் மருத்துவமனைகளில் தீ விபத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டதனை தொடர்ந்து, இது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்படாதவாறு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இயக்குநர் முனைவர். திரு. சி. சைலேந்திரபாபு, இ.கா.ப, அவர்களின் வழிகாட்டுதலின்படி, அனைத்து மருத்துவமனைகளையும், தீ பாதுகாப்பு நோக்கில் அலுவலர்கள் ஆய்வு செய்தும், அரசு மருத்துவமனைகள் மற்றும் நந்தம்பாக்கம் போன்ற ஆக்ஸிஜன் படுக்கை வசதி கொண்ட தற்காலிக மருத்துவ மையங்களில் ஊர்தி குழுவினருடன் பாதுகாப்பு பணி மேற்கொண்டும், […]

Continue Reading

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு10 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி- தைவான் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கியது.!!!

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனை கொராணா சிகிச்சை மையத்திற்கு தைவான் நாட்டின் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகம் 10 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளைஅன்பளிப்பாக வழங்கியுள்ளது. எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் SRMIST(முன்னாள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்) உலக அளவில் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிவர்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.அதன்படி தைவான் நாட்டின் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகத்துடன்(National Tsing Hua University)செய்துள்ள ஒப்பந்தம் மூலமாக இந்த இரு கல்வி நிறுவனங்களும் பல்வேறு கல்வி […]

Continue Reading

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.!!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (25.5.2021) தலைமைச் செயலகத்தில், முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் எல்லா பகுதி மக்களுக்கும் தங்குதடையின்றி விநியோகம் செய்வது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் (முழு […]

Continue Reading

சேலம் மாவட்டத்தில்18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.!!

சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். தடுப்பூசி போடும் பணி 18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால் அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வராததால் சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக […]

Continue Reading

மலேசியாவில் 2 மெட்ரோ ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 200 பயணிகள் காயம்.!!

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் உள்ள பெட்ரோனஸ் இரட்டை கோபுர சுரங்கபாதையில் காலிப்பெட்டிகளுடன் சென்று கொண்டு இருந்த மெட்ரோ ரெயில் அதே வழித்தடத்தில் 213 பயணிகளுடன் வந்த மற்றொரு ரெயில் மீது மோதியது. இதில் 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 166 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதுஉள்ளது மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Continue Reading

சென்னை: ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள்கள் வினியோகம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.!!!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 24) ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருட்களான காய்கறி கடைகள் உள்ளிட்ட பல கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் மக்களுக்கு தடையின்றி கிடைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் […]

Continue Reading

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாகனங்கள் மூலம் 5 ஆயிரம் டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு: விவசாயிகள் அனுமதி பெற தொலைபேசி எண் வெளியீடு.!!!

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாகனங்கள் மூலம் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. காய்கறிகள், பழங்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல விவசாயிகள் அனுமதி பெறுவதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகமே 24 முதல் 31 வரை முழு ஊரடங்குஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் தடையின்றி கிடைக்க வாகனங்கள் மூலம்விற்பனை […]

Continue Reading