100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவல்லிக்கேணி முஸ்லிம் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்சந்திப்பு நிகழ்வு .!!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வருடாந்திர பொது சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இறைவணக்கத்திற்கு பின், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தலைவர் ஜுனைத்பாஷா வரவேற்புரையாற்றினார். செயலாளர் முகம்மதுஅப்துல்நசீர் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். பொருளாளர் சாஜித் அலி சங்க வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். நன்றி உரைக்குப்பின் தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. துணைத்தலைவர் ஏஜாஸ்பேக் துணைச்செயலாளர் ரிஸ்வான்நசிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Continue Reading