மூத்த தமிழ் நடிகை மற்றும் தயாரிப்பாளர்,இயக்குனர், கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இன்று காலை அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கி உதவினார்.!!

கொரனோ தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.இதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மூத்த தமிழ் நடிகை தயாரிப்பாளர், இயக்குனர் ,டாக்டர் கலைமாமணி ஜெயசித்ரா 1000 -க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற அடிப்படை பொருள்களை இந்த கொரோனா காலத்திலும் கடும் கொரானவையும் பொருட்படுத்தாமல் தக்க சமயத்தில் இன்று காலை நேரில் சென்று உதவினார்.கலை உறவுகள் கவலை படாமல் தைரியமா சந்தோஷமாக இருங்கள்,விரைவில் நல்லது […]

Continue Reading

கொரோனோவினால் பாதிக்கபட்டவர்களுக்காக ஸ்ட்ரீட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மக்களுக்கு இலவச ஆக்ஸிஜன் ஆட்டோவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கிவைத்தார்.!!

கொரோனோவினால் பாதிக்கபட்டவர்களுக்காக ஸ்ட்ரீட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மக்களுக்கு இலவச ஆக்ஸிஜன் ஆட்டோவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கிவைத்தார்.!! ஸ்ட்ரீட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மக்களுக்கு இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ மூலம் சேவை செய்து வருகின்றனர். இந்த சேவையை பாராட்டி இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் மேலும் இது போன்ற 3 இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.அருகில் தொண்டு நிறுவனர்.சீதா தேவி மற்றும் […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலின் கொரோனோ நோயாளிகளுக்காக ராயப்பேட்டையில் 130 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.!!

  தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் சென்னை, இராயப்பேட்டை, வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்து, ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது,நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்,சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் […]

Continue Reading

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குருக்கள்களுக்கு திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உதவி.!!

  கோரோனோ ஊரடங்கு காரணமாக கோவில்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குருக்கள்களுக்கு திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவி செய்துள்ளார். கொரோனா ஊரடங்கால் கோயில்கள் அனைத்திலும் பொதுமக்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிவேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குருக்கள்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.இந்நிகழ்வில் […]

Continue Reading

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்உதயநிதி ஸ்டாலின் கொரனோ தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து நிவாரண பொருட்களை வழங்கினார்.!!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி,119வது வட்டம்,பேகம்சாகிப் தெருவில் கொரோனா தடுப்பூசி முகாமை இன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இதில் பங்கேற்ற 18வயதுக்கு மேற்பட்ட ஏராளமானவர்களுக்கு நிவாரணபொருட்களை வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சிற்றரசு,திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், திருவல்லிக்கேணி திமுக அவைத்தலைவர் கா.வே.செழியன் வட்ட செயலாளர் கா.வே.மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாற்று திறனாளிகளுக்கு கொரோனோ தடுப்பூசி முகாம் தொடங்கி வைத்தார்.!!

சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மண்டபத்தில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாற்றுத்திறனாளிக்கான தடுப்பூசி போடும் முகாமை இன்று தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட்ட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த மே 16-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில்,மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்-அமைச்சர் […]

Continue Reading

சர்வதேச விருதுகளை அள்ளி குவித்த சின்னஞ்சிறு கிளியே திரைப்படம் அவுட்ஸ்டேண்டிங் அச்சீவ்மெண்ட் விருது சிறந்த அறிமுக இயக்குனர் விருது.!!

சர்வதேச விருதுகளை அள்ளி குவித்த சின்னஞ்சிறு கிளியே திரைப்படம் அவுட்ஸ்டேண்டிங் அச்சீவ்மெண்ட் விருது சிறந்த அறிமுக இயக்குனர் விருது சிறந்த குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கான திரைப்பட விருது இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் விருது சிறந்த இந்திய திரைப்பட விருது சிறந்த இயக்குனர் ஸ்பெஷல் ஜூரி விருது போன்ற பல்வேறு விருதுகளை பல்வேறு இன்டர்நேஷனல் பெஸ்டிவலில் வென்றுள்ளது. இப்படம் தந்தை மகளுக்கான பாசத்தை மையமாக கொண்டு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் விபரீதத்தையும் ஒரு சேர சொல்லும் […]

Continue Reading

கொரோனாவுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில், கரும்பூஞ்சை நோய் புதிய சவாலாக தோன்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.!!

கொரோனாவுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில், கரும்பூஞ்சை நோய் புதிய சவாலாக தோன்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.!! கொரோனா தடுப்பூசி, மக்களுக்காக சேவை செய்யும் நமது முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது. வரும் நாட்களில், அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பை விரிவுப்படுத்துவோம். கொரோனாவுக்கு எதிரான நமது தற்போதைய போராட்டத்தில், கரும்பூஞ்சை நோய் புதிய சவாலாக தோன்றியுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Continue Reading

ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ்-சென்னை மாநகராட்சி இணைந்து இலவச கொரோனோ தடுப்பூசி முகாம் செம்மொழிப் பூங்காவில் நடைபெற்றது.!!

ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ்-சென்னை மாநகராட்சி இணைந்து இலவச கொரோனோ தடுப்பூசி முகாம் மத்திய சென்னையில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில் நடைபெற்றது. இதில் 700க்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.இந்த பிராமாண்ட கொரேனோ தடுப்பூசி முகாமில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் முதன்மை நிர்வாகிகள் எஸ்.கபில் சாட்லே, பி.பி.பிரசாத், ரிலையன்ஸ் ரவிசுந்தரம், பி.வி.மோகன்ராமன்,டாக்டர் ரபீக், டாக்டர் கொளதம், சஞ்சய், வினோத்குமார், ரத்தன்,ஒய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளார்,சிவலிங்கம், சென்னை மாநகராட்சி 9வது மண்டல சுகாதார துறை அதிகாரி டாக்டர் […]

Continue Reading

செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதனை இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்.!!

செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதனை இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் மோகன் தாரா, மாநில செயலாளர் சங்கர், மாநில இணைச் செயலாளர் ஸ்பைடர் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் நூதன் பிரசாத் ஆகியோர் தலைமை செயலகத்தில் இன்று சந்தித்து பேசினர். சட்டமன்ற கூட்டத் தொடரில் குறைந்த எண்ணிக்கையில், குறிப்பிட்ட சில நிருபர்களை துறையின் ஒருசிலரின் விருப்பத்திற்கேற்ப சபையில்  அனுமதிப்பதால் சில செய்தியாளர்கள் செய்தி எடுக்க முடியாமல் தவித்து வருவது குறித்தும், கடந்த காலத்தில் பத்திரிகையாளர்களிடையே […]

Continue Reading