சசிகலாவின் ஆடியோ மீது கேபி முனுசாமி குற்றச்சாட்டு.!!!

அரசியலில் அவருடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஒரு அதிரடி அறிவிப்பை சசிகலா வெளியிட்டார். அதில், ‘நான் என்றும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித்தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை […]

Continue Reading

சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கான மளிகை பொருட்கள் வாகனங்களை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம், பி.கே.சோகர் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் மளிகை வாகனங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்களும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்களும் இன்று (31.05.2021) பட்டாளம், ஸ்ட்ராஹான்ஸ் சாலையில் உள்ள திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி […]

Continue Reading

தமிழகத்தில் கொரோனா தோற்று படிப்படியாக குறைவு.!!!

திருவள்ளூரில் 1,181 ஆக இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை 887 ஆகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,117 ஆக தினசரி பாதிப்பு 912 ஆகவும், தஞ்சையில் 995 ஆக இருந்த பாதிப்பு 786 ஆகவும் குறைந்து இருக்கிறது. இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தினசரி பாதிப்பு 1000-க்கும் குறைவாகவே உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 24-ந்தேதியில் இருந்து தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை […]

Continue Reading

சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் புறாக்களுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக ஒருநாள் தவறாமல் உணவளிக்கப்பட்டு வருகிறது.!!!

உலகம், மனிதா்கள் மட்டுமின்றி பல்வகை உயிரினங்களால் ஆனது. கரோனா பெருந்தொற்றும் , தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கமும் இந்த உலகையே நிலைகுலையச் செய்துள்ளது. இந்த அசாதாரண சூழலில் ஆதரவற்ற பொதுமக்களுக்கு தன்னாா்வலா்களும், தொண்டு நிறுவனங்களும், அரசும், அரசியல் கட்சியினரும் உணவு வழங்கி வருகின்றனா். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விலங்குகள் நல ஆா்வலா்கள் பலா் தங்களால் இயன்றவற்றை தெருநாய், பறவைகள் உள்ளிட்டவற்றுக்கு வழங்கி வருகின்றனா். குறிப்பாக சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் லட்சக்கணக்கான புறாக்கள், காகங்கள் மற்றும் நாய்களுக்கு […]

Continue Reading

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார்.!!!

குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கீழ் செயல்படும் ஆவின் பாலகங்களின் வாயிலாக விற்பனைச் செய்யப்படும் பால், நெய் மற்றும் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட விலையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து இன்று அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பால்பண்ணை ஆய்வகங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொத்தமுள்ள 18,600 லிட்டர் பாலையும் பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், பால்கோவா, பாதாம் பவுடர், ஐஸ்கிரீம், சாக்லேட், தயிர் மற்றும் […]

Continue Reading

தமிழகத்தில் இன்று கொரோனா தோற்று குறைவு.!!!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 28,864 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,73,351 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 28,864 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,537 பேருக்கும், சென்னையில் 2,689 பேருக்கும், ஈரோட்டில் 1,784 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,68,580ஆக உயர்ந்துள்ளது. […]

Continue Reading

சசிகலா பேட்டி‘தைரியமாக இருங்கள், கட்சியை சரிசெய்து கொள்ளலாம், நிச்சயமாக வருவேன்’

‘தைரியமாக இருங்கள், கட்சியை சரிசெய்து கொள்ளலாம், நிச்சயமாக வருவேன்’ என தொண்டரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா ‘தைரியமாக இருங்கள், கட்சியை சரிசெய்து கொள்ளலாம், நிச்சயமாக வருவேன்’ என தொண்டரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் அவரின் அரசியல் முடிவு பரபரப்பாக […]

Continue Reading

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டும் கமல் வேண்டுகோள்.!!

தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டும்! இந்தப் பேரிடர் காலத்தில் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் இயல்பு வாழ்க்கை பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறது, சில ஆசிரியர்கள் நிர்வாகம் தரும் பாதி சம்பளத்தில் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். பல ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாலும், நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் வேலையை இழந்துள்ளார்கள். ஓராண்டிற்கும் மேலாக மாற்று வேலைவாய்ப்புகள் இன்றியும், வருமானம் இல்லாமலும் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருகின்றனர். லட்சக்கணக்கான […]

Continue Reading

கறுப்பு உள்ளிட்ட பிற பூஞ்சைத் தொற்றுகள் பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கவும், பயத்தைப் போக்கவும்.!!!

கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் குறைவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியிருப்பது சற்று ஆறுதலளிக்கிறது. ஆனால் கோவிட் தொற்று தாக்கியவர்களுக்கு ஏற்படும் கறுப்பு பூஞ்சைத் தொற்று பலரை கலக்கத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்திலும் 400-க்கும் மேற்பட்டவர்களை இந்தத் தொற்று பாதித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கறுப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழக்கும் நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. தேவையான மருந்து உள்ளிட்ட விஷயங்களில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், கறுப்பு பூஞ்சைத் தொற்றைத் […]

Continue Reading

தமிழகத்தில் கொரோனா தாண்டவம் இன்று ஒரேநாளில் புதிதாக 30016 பேருக்கு நோய் தொற்று.!!!

தமிழகத்தில் இன்று புதிதாக 30,016 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,74,349 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 30,016 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,692 போ்பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.  அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,705 பேருக்கும், ஈரோட்டில் 1,742 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,39,716ஆக உயர்ந்துள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா […]

Continue Reading