பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ம் தேதி நடைப்பெறும் பந்த்துத்துக்கு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு என அதன் தலைவர் சேம நாராயணன் அறிக்கை.!!
மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம , நாராயணன் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக 10-ம் தேதி நாடு தழுவிய பந்த் நடைப்பெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு தர வேண்டும் என்றும்அழைப்பு விடுத்தது, அந்த அடிப்படையில் மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வால் ஏழை ,எளிய அன்றாட காச்சிகள் முதல் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், எரிபொருள் பயன்படுத்தாமல் எந்த செயலும் நடக்காது, பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் தினசரி எரிப்பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது பெட்ரோல், டீசல் விலை லிட்டர் நூறு ரூபாய்க்கு எட்டி செல்லும் நிலையுள்ளது இதே நிலை நீடித்தால் பா.ஜ.க ஐந்தாண்டு கால ஆட்சி முடிவில் 200 ரூபாய்க்கு விற்கும் அபாயம் உள்ளது, மற்ற பொருட்களை யொல்லம் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்த மத்திய பா.ஜ.க அரசு எரிபொருட்களை ஏன், ஜி.எஸ்.டி யில் கொண்டு வர தயங்குகிறது,எரிப்பொருட்களின் விலை உயர்வால் பதிமூன்றாயிரம் கோடி எடுத்துள்ளது, இன்னும் மக்களை வஞ்சித்து சுரண்டவேண்டும் என்று நினைக்கிறதா?10-ம் தேதி நடைப்பெறும் பந்த்திற்கு தமிழகத்திலுள்ள பிரதான கட்சிகள் முழு ஆதரவை கொடுத்துள்ளது, இன்னும் பிற கட்சிகளும் கட்சி பேதம் பார்க்காமல் தமிழகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும், பங்களிப்பையும் காட்டும் வகையில் ஆதரவு வழங்கி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முடிவு கட்டி, விலையை குறைக்கவும் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என கன்டன அறிக்கை விடுத்துள்ளார் .