சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முகமத் கைஃப் ஓய்வு

இந்திய கிரிக்கெட் வீர்ர் முகமத் கைஃப் அனைத்து தர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில், ” நான் கிரிக்கெட் விளையாட ஆரமித்தப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் தொப்பியை அணிந்து ஆடுவது என்பது கனவாக இருந்தது. நான் இந்திய அணிக்காக களத்தில் இறங்கி விளையாடியது மிகவும் அதிருஷ்டமான ஒன்று. எனது வாழ்வில் 190 நாட்கள் எனது நாட்டுக்காக விளையாடி இருக்கிறேன். அனைத்து கிரிக்கெட்டி போட்டியிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன் […]

Continue Reading

பிரேசிலின் நெய்மருக்கு ஃபிபா தலைவர் ஆதரவு

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் கால்பந்து நட்சத்திர வீரரான நெய்மர் எதிரணி வீரர்களால் அதிக முறை பவுல் செய்யப்பட்டு கீழே விழுந்த போது அவர், நடிப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவருக்கு ஆதரவாக ஃபிபா தலைவர் இன்பான்டினோ கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொட ரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் […]

Continue Reading

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் அடுத்த ஆண்டில் இந்தியா வர திட்டம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டுள்ளார். புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனரான அமித் பானர்ஜிக்கு எலான் மஸ்க் ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக அமித் பானர்ஜி, எப்போது இந்தியா வர திட்டம் என கேட்டிருந்தார். அநேகமாக அடுத்த ஆண்டு என எலான் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த டெஸ்லா திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் சட்ட திட்டங்களும், விதிமுறைகளும் இதை செயல்படுத்துவதில் […]

Continue Reading

ரூபாய் மதிப்பு சரிவு உங்களை பாதிக்கும்

அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மாதம் ரூ.69.09-ஆக சரிந்திருப்பதைத் தொடர்ந்து இந்திய ரூபாய் மீண்டும் செய்திகளில் இடம்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தொடர்ந்து இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகை அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் நிதிக் கணக்கீடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. இதனால் பொது மக்களுக்கு என்னவகையான பாதிப்புகள் ஏற்படும்? ரூபாய் மதிப்பு சரிவதால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பதைப் பார்க்கலாம். ரூபாய் மதிப்பு சரிவு சில […]

Continue Reading

விரைவில் வருகிறது டாடா ஹாரியர்

இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது டாடா அரங்கில் காட்சிப்படுத்தப்படிருந்த எஸ்யுவி வாகனம். அதற்கு அப்போது சூட்டப்பட்டிருந்த தற்காலிக பெயர் ஹெச்5எக்ஸ் (H5X). தற்போது இந்த மாடலுக்கு `ஹாரியர்’ (Harrier) என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. 5 பேர் பயணிக்கும் எஸ்யுவி மாடலுக்கு இந்தப் பெயர். இதில் 7 பேர் பயணிக்கும் வகையிலான மற்றொரு மாடலுக்கான பெயர் விரைவில் அறிவிக்கப்போவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த கார் டாடா மோட்டார்ஸின் […]

Continue Reading

ஆசிய பங்கு சந்தைகளை கைப்பற்றும் டிராகன்

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை வேறொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ வாங்கமுடியும் என்பது நாம் முன்னரே அறிந்த செய்திதான். ஆனால் ஒரு நாட்டின் பங்கு சந்தையையே வேறொரு நாட்டின் பங்கு சந்தை வாங்க முடியும் என்றால் நம்பத்தான் வேண்டும். இதனை டீமியூச்சுவலைசேஷன் என அழைக்கிறார்கள். நீண்டகாலமாக நடந்துவரும் இப்படியான வர்த்தகத்தில்தான் தற்போது சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. பங்குச் சந்தையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை மாற்றியமைத்து, ஒரு நிறுவனம் குறிப்பிட்ட பங்கு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இந்த செயல்பாடு […]

Continue Reading

ஆப்கனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 11 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் ஆப்கன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலியாகினர்.  4 பேர் காயமடைந்தனர்.  வெள்ளிக்கிழமை இரவிலிருந்து இந்தத் தாக்குதல் நடந்து வருகிறது. ராணுவ வீர்ர்கள் நடத்திய பதில் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 13 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை தலிபான்கள் […]

Continue Reading

ராவல்பிண்டி சிறையில் நவாஸ் அடைப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (68) ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகள் மரியம் (44) அதே சிறையின் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டார். லண்டனில் சட்டவிரோதமாக 4 வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு கடந்த 6-ம் தேதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதே வழக்கில் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகளும் மரியத்தின் கணவர் கேப்டன் சப்தாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. […]

Continue Reading

பாகிஸ்தான் சிறையில் சலுகைகளை மறுத்தார் நவாஸின் மகள் மரியம்

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் சிறப்பு சலுகைகளை மறுத்துள்ளார். லண்டனில் சட்டவிரோதமாக வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. லண்டனில் தங்கியிருந்த இருவரும் கடந்த 13-ம் தேதி பாகிஸ்தான் திரும்பினர். லாகூர் விமான நிலையத்தில் அவர்களை போலீஸார் கைது செய்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைத்தனர். சிறையில் […]

Continue Reading

112 எம்எல்ஏ.க்களை எதிர்த்து விவசாயிகள் ம.பி.யில் பிரச்சாரம்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விவசாய அமைப்பான ஆம் கிசான் யூனியன் தலைவர் கேதார் சிரோஹி கூறியதாவது: ”ம.பி. சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆதரவில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பலர் சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசவில்லை. அதுபோல, விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி பேசாத 112 எம்எல்ஏக்களை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு எதிராக விவசாயிகள் பிரச்சாரம் செய்வார்கள். இந்த 112 எம்எல்ஏ.க்களின் 86 பேர் பாஜகவைச் […]

Continue Reading