சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கலந்துகொண்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் 4 அடுக்குமாடியை இடித்து8 மாடி கட்டிடம் கட்ட குடியிருப்போர் கடும்எதிர்ப்பு.!!

குடிசைப்பகுதி மக்களுக்கு  8 மாடி குடியிருப்பு திட்டம் நன்மை தராது! மயிலாப்பூர் கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு!! சென்னை செப்-15 குடிசைப்பகுதி மக்களுக்கு 8 மாடி குடியிருப்பு திட்டம் நன்மை தராது என்று மயிலாப்பூரில் நடைபெற்ற  கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால்  அங்கு வசித்து வந்த குடிசை மக்களுக்கு  அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன . இந்த வீடுகள்  பழுதாகி விட்டதால் இவற்றை […]

Continue Reading

ஆட்டோவில் தவறவிட்ட பையை 1 மணி நேரத்தில் ஒப்படைந்த ஆட்டோ டிரைவர் பாராட்டு குவிகிறது…!

ஆட்டோவில் தவறவிட்ட பையை 1 மணி நேரத்தில் ஒப்படைந்த ஆட்டோ டிரைவர் பாராட்டு குவிகிறது…! சென்னை.செப்-14 பங்களாதேஷ், சிட்டா காங் பகுதியை சேர்ந்தவர் முகமது ராஷேத் (வயது 30) இவர் இம்மாதம் 1-ம் தேதி அவரது சொந்த ஊரில் இருந்து உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவர் தங்கியிருக்கும் ரூமிலிருந்து ஆட்டோவில் மருந்துவமனைக்கு வந்தார்.அப்போது ஆட்டோவில் அவரது பையை தவறவிட்டார். அதில் அவர் வைத்திருந்த பாஸ்போட், […]

Continue Reading

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!!

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!! சென்னை செப்டம்பர் 13 மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 22 நாடுகள் கலந்து கொள்ளும் பிரமாண்ட கராத்தே போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் அடங்கிய குழு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வரும் செப்டம்பர் 16ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை […]

Continue Reading

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை இன்று சென்னை வருகை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொன்மாணிக்கவேல் பெற்றுக்கொண்டார்.!!

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட  பழங்கால நடராஜர் சிலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தடைந்தது. எச்டி பொன்மானிக்கவேல் பெற்றுக்கொண்டார். வெளிநாடுகளில் இன்னும் 20 சிலைகள் உள்ளன என பொன்மானிக்கவேல் தெரிவித்தார்.!! நடராஜர் சிலையை கொண்டு வந்த பொன்.மாணிக்கவேல் சென்னையில் அளித்த பேட்டியில், “37 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிலையை நாங்கள் கண்டுபிடித்து கொண்டு வந்துள்ளோம். நாம் கும்பிடும் சாமி சிலைகள் வெளிநாட்டில் காட்சிப் பொருளாக வைக்கப்படுகின்றன. சிலைகள் கடத்தல் வழக்கில் […]

Continue Reading

தமிழ் திரையுலகின் மூத்த நடிகை ஜெயசித்ரா பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரை உலக பிரபலங்கள் பங்கேற்பு.!!

கலைமாமணி டாக்டர் ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள […]

Continue Reading

சென்னை திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!! தொழில் முதலீடுகளை பெறும் வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார். அவரை அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், துரைகண்ணு ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், மாஃபா பாண்டியராஜன், பா.வளர்மதி, மாவட்ட செயலாளர் தி.நகர் சத்தியா  மற்றும் எம்ல்ஏக்கள், எம்பிக்கள் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் […]

Continue Reading

சென்னையில் நடைபெற்ற ஜூனியர் அத்தலெட்டிக் சேம்பியன்ஷிப் 2019 போட்டியில்  குமரி மாவட்டம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி கிரேசியா G மெர்லி சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.!!

சென்னையில் நடைபெற்ற ஜூனியர் அத்தலெட்டிக் சேம்பியன்ஷிப் 2019 போட்டியில்  குமரி மாவட்டம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி கிரேசியா G மெர்லி மாநில அளவிலான உயரம் தாண்டுதலில் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்து 1.76 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அவருக்கும் அவருக்கு சிறந்தமுறையில் பயிற்சியளித்த பயிற்சியாளர்  ஜெயதாஸ் அவர்களை நாகர்கோவில் பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Continue Reading

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.!! உலக பிரசித்தி பெற்ற நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன்  வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள்  கலந்துகொண்டனர். பசலிக்கா அந்தஸ்து பெற்ற பேராலயமாகவும், உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ தலமாகவும் விளங்குகிறது  வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். கீழை நாடுகளின் லூர்து என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டுப் பெருவிழா […]

Continue Reading

மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னையில் நடந்தது.!!

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.க்கள் தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட தி.மு.க. வின் அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

Continue Reading

சென்னை பாஜக அலுவலகத்தில் மறைந்த அருண் ஜெட்லிக்கு அஞ்சலி.!!

பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் மரியாதைக்குரிய திரு அருண்ஜேட்லி அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார் அவர்கள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மாநில அமைப்புச் செயலாளர் திரு கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Continue Reading